ஞாயிறு, 24 மே, 2009

வேண்டாமே ஆக்சன் சந்தை !!!

வணக்கம் நண்பர்களே !!!

அடுத்த புதிய பதிவாக எதை எழுதலாம் என்று தோன்றிய பொழுது ஆக்சன் சந்தை பற்றி தோன்றியது ------

இனி அதன் விபரங்களை பார்ப்போம் ---

நாம் முன்பு பங்கு சந்தை ஒரு அலசலில் பார்த்து போல பங்குகளை வாங்கிய () விற்ற பங்குகளை அன்றைய தினத்தன்றே கணக்குகளை முடித்து தர வேண்டும் . அவ்வாறு செய்ய விட்டால் வாங்கிய பங்குகள் டெலிவரி ஆகிவிடும் தரகு நிறுவனத்திற்கு பங்குகளுக்கான தொகையினை செலுத்த வேண்டும் . விற்று வாங்காமல் விட்டு விட்டால் அது ஆக்சன் சந்தைக்கு சென்று விடும் .

ஆக்சன் சந்தை என்றால் என்ன ?

ஆக்சன் சந்தைகள் பங்கு சந்தைகள் தினசரி வணிகமாகும் அதே சந்தைகளில் 12 - 1.30 வரை தனியாக வணிகமாகும் . நாம் பங்குகளை வாங்கி விற்பது போல அங்கே நடக்காது தங்களது கணக்கில் பங்குகளை வைத்துள்ள நபர்கள் விற்ப்பனை மட்டும் செய்யலாம் . யார் வேண்டுமானாலும் விற்ப்பனை செய்யலாம் .

இந்த சந்தையில் விற்ப்பவர்கள் யார் . ??

இதில் விற்ப்பவர்கள் நம்மை போல வணிகர்கள் தான் ஆனால் அவர்கள் கணக்கில் பங்குகள் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம் . அவ்வாறு கணக்கில் இருந்தால் சந்தையில் வணிகமாகும் விலையை விட 30 % அதிக விலையிட்டு செல்லிங் செய்யலாம் .

காரணம் ஆக்சன் சந்தைகளில் வாங்குபவர்கள் நமது எக்ஸ்ச்சஞ் தான் அவர்கள் விலையை பார்க்க மாட்டார்கள் . இத்தனை பங்குகள் தேவை என ஆக்சன் சந்தையில் உள்ள விலைகளில் பங்குகளை வாங்கி கணக்கை நேர் செய்வார்கள் . அது 10 % to 30 % வரை நமது சந்தை விலையை விட அதிகமாகவும் குறைவாகவும் இருக்கலாம் .

ஆக்சன் பிற விளக்கங்கள் . ??

மேற்குறிப்பிட்ட படி ஒருவர் தனது கணக்கில் பங்குகளை விற்று கணக்கை நேர் செய்யாமல் விட்டு விட்டால் அது ஆக்சன் சந்தைக்கு விற்றதற்கு பின் இரண்டாவது நாளில் ஆக்சன் சந்தைக்கு வரும் . இது தனியாக ஒவ்வொரு நபர்களை வைத்து பங்குகள் வாங்கப்பட மாட்டார்கள் .

உதா ; ஷேர்கான் , கார்வி , இந்போ லைன் போன்ற பங்கு தரகு அலுவலகங்களின் தலைமையகத்தில் இது போல பங்குகள் மொத்தம் எத்தனை தேவை என கணக்கு இருக்கும் அதை எக்ஸ்ச்சஞ்சில் தினம் கணக்கிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்து ஆக்சன் சந்தைகளில் பங்குகளை வாங்குவார்கள் .

இவ்வாறு ஆக்சன் சந்தைகளுக்கு சென்று பங்குகள் வாங்கப்பட்டால் இது போல தவறுகள் நடக்க கூடாது என்று சில நிறுவனங்கள் அபராதமும் விதிக்கின்றன .

நண்பர்களே !!!

எனது அனுபவத்தின் அடிப்படையில் கண்ட சில உண்மைகள் -----


** அன்றைய தினம் விற்று அதிகரித்த பங்குகளை ஆக்சனுக்கு அனுப்புவதால் நமக்கு டெலிவரி கமிசன் மற்றும் கவர செய்யும் தினம் பங்கின் விலை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் .

தற்போதைய சூழலில் சந்தைகளில் ஆக்சன் சந்தை துவங்கும் பொழுது சந்தைகள் தற்காலிகமாக உயர்த்தப்படுகின்றன . ஆக்சன் சந்தைகள் முடிவடையும் பொழுது தான்
நமது சந்தைகள் சரிவடைகின்றன ..

** ஆக்சன் சந்தைகளிலும் சில சூதாடிகள் உள்ளனர் அவர்கள் அதிக அளவில் பங்குகள் வரும் பொழுது பங்கின் விலையை மிகவும் அதிகரிப்பது இவர்களின் முக்கியமான வேலை ..

** அதிகம் வர்த்தகம் ஆகாத பங்குகளில் விற்ப்பவர்கள் தனது இஷ்டத்திற்கு 30 % வரை அதிக விலையிட்டு வைப்பார்கள் சந்தையில் அந்த விலையிலும் சில சமயம் பங்குகள் வாங்கப்படும் .

நன்றி நண்பர்களே !!!

தங்களது கருத்துக்களை எனக்கு அனுப்புங்கள் ---

அன்புடன்
ரமேஷ்