நேற்றைய சந்தைகள் முழுவதும் அமெரிக்காவின் வங்கிகளின் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள சில பிரச்சனைகளுக்காக கொள்முதலை அதிகரிப்பது சம்பந்தமான " street strees " எனப்படும் அறிவிப்பிர்க்காக சந்தைகள் முழுவதும் சரிவுகள் எதுவும் இல்லாமல் வர்த்தகமானது .
ஆசியா சந்தைகள் முடிவில் சற்று நல்லதொரு உயர்வினை கண்டது , ஆசியா சந்தைகள் முடிவில் 2 % - 3 % வரை உயர்வில் முடிந்தன (முந்தய தினம் 2 % - 5 % . நமது சந்தைகளும் அதே போல 1.5 % -2 % வரை உயர்வில் முடிக்கப்பட்டன . இன்னும் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடுகள் நிறுத்தப்பட வில்லை சந்தைகளை அவர்கள் வாங்கும் படலம் இன்னும் நிற்கவில்லை .
அதோடு மட்டுமல்லாமல் உலக சந்தைகள் முழுவதிலும் அவர்களது வாங்கும் படலம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை . நமது சந்தைகளில் l நுட்ப காரணிகளை செல்லுபடி ஆகாமல் சந்தைகளில் வர்த்தகம் நடந்து ( நடத்தப்பட்டு ) வருகிறது .
குறிப்பிட்டு சொல்ல போனால் அவர்கள் வாங்குவது என்பது சில பங்குகளின் விலையினை நன்கு ஏற்றம் செய்து பின்னர் அவற்றை உயர்ந்த விலைகளில் விற்ப்பனை செய்து விட்டு சந்தையில் இருந்து வெளியேறி சம்பந்தம் இல்லாத வர்த்தகம் அதிகம் ஆகும் துறை வாரியான பங்குகளில் தங்கள் கை வரிசையை காட்டு கின்றனர் ..
நேற்றைய அமெரிக்கா சந்தைகளும் " street strees " அறிவிர்ப்பிர்க்காக சந்தைகள் சிலமணி நீரம் ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆனது . பின்னர் வங்கிகள் பங்கு சந்தைகளில் பங்குகளை மற்றும் அரசின் பாண்டு விற்பனை மூலம் தங்கள் கொள்முதலை அதிகரிக்கலாம் என அறிவிப்புகள் வெளிவந்ததும் சந்தைகள் சரிவினை காண ஆரம்பித்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 1.5 % - 2.5 % வரை சரிவில் முடிந்தன ..
இன்றய ஆசியா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் வர்த்தகம் துவங்கி உள்ளன . நமது சந்தைகள் போக்கில் இன்று சில குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளன . இன்பிலேசன் அறிவிப்பு பின்னர் உலக சந்தைகளின் சரிவு மற்றும் " street strees " இவை அனைத்து உள்ள சூழலில் சந்தைகள் இன்று துவக்கம் " பிளாட் " நிலைகளில் துவங்கலாம் . பின்னர் சந்தைகளில் ஆசியா சந்தைகளின் போக்கினை பிரதிபலிக்கலாம் .
பார்த்து கவனமாக வர்த்தகம் செய்யவும்
நிப்டி நிலைகள்
அதரவு -- 3650 , 3615 , 3580 ..
எதிர்ப்பு -- 3683 , 3701 , 3710 ..
நன்றி !!!