சூடான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி !!!
காங்கிரஸ் கட்சி திரும்ப வெற்றி பெற்று ஆட்சிஅமைப்பது சந்தைகளுக்கு பலமான ஒரு செய்தியாகும் . நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் எதற்காக தொடர்ச்சியாக வாங்கி வந்தனர் என்பது இப்பொழுது தான் எனக்கும் மற்ற அனைவருக்கும் இன்று தான் விளக்கம் கிடைக்கும் .
நமது சந்தையில் வணிகம் செய்யும் சிறு சிறு நபர்களை எல்லாம் சந்தைகள் சரிவின் பொழுது சந்தையை விட்டே ஓரளவு விலக்கி விட்டனர் இன்னும் சிலரை இந்த உயர்வில் காணாமல் போக செய்து விடுவார்கள் நமது அந்நிய முதலீட்டாளர்கள் . காரணம் நமது ஆட்கள் இன்று முழுவதும் வாங்கும் படலத்தில் இருப்பார்கள் அவர்கள் விற்கும் படலத்தில் இருப்பார்கள் .
இன்றைய ஆசியசந்தைகள் அனைத்தும் 2 % அளவிற்கு சரிவில் துவங்கி உள்ளன . இவை அந்த சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்யும் நிலைகளாக இருக்கலாம் . மேலும் நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளை பின் தொடராது .
நமது சந்தைகள் இன்றைய துவக்கம் அந்நிய முதலீட்டாளர்கள் கையில் உள்ளது . அவர்கள் சந்தையை எது வரை கொண்டு செல்ல விருப்பமோ அது வரை கொண்டு செல்வார்கள் என்று நினைக்கிறேன் . மேலும் நமது மக்களில் பெரும்பாலும் " செல்லிங் " இல் உள்ளனர் அதை அந்நிய முதலீட்டாளர்கள் அதிக புள்ளிகள் இழப்பிற்கு வாங்க செய்வார்கள் என நினைக்கிறேன் .
காங்கரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சந்தைகளில் சரிவுகள் தடுத்து நிறுத்த முடியாது . சந்தையில் தற்சமயம் உள்ள நிலைகளே சற்று அதிகம் என எல்லோராலும் கணிக்கப்பட்டுள்ளது . ஆகவே சந்தையில் வாங்க வேண்டாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள் . இந்த உயர்வுகள் ஒரு வித மாயை போன்ற தோற்றம் தான் . இது தான் இன்றைய சந்தையின் தாரக மந்திரம் . இதை தான் என் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன் .
மேலும் அதிக ரிஸ்க் எடுத்து ( அதாவது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என கருதி புட் மற்றும் செல்லிங் இல் இருக்கும் நபர்கள் சந்தை துவக்கத்தில் சற்று சந்தையில் இருந்து வெளியேறுங்கள் மீண்டும் சம்பாதிக்கலாம் . தற்போதைய நிலவரப்படி சிங்கபூர் நிப்டி 13 % வரை அதிகரித்து 441 புள்ளிகள் உயர்வில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . )
நமது சந்தைகளில் மே இறுதி வரை சந்தைகளில் சற்று அதிக உயர்வுகள் மற்றும் குறைந்த சரிவுகள் வரும் என நினைக்கிறேன் . ஆகவே முடிந்த வரை சந்தையில் இருந்து சற்று விலகி இருங்கள் .
நிப்டி நிலைகள் ----
இன்று நிப்டி எல்லா எதிர் நிலைகளையும் கடந்து தான் சந்தைகள் துவங்கும்
நன்றி !!!