புதன், 6 மே, 2009

வணக்கம் நண்பர்களே !!

என்னுடைய சொந்த வேலைகளின் காரணமாக இன்றைய பதிவை எழுத முடியவில்லை . மன்னிக்கவும் ..

மேலும் நடந்து முடிந்த சந்தைகளை பற்றி பதிவு எழுத மனம் இல்லை ..

ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் உங்களோடு ----

நேற்றய சந்தையில் நிப்டி அதிக பட்சமாக 3693 வரை சென்று பின்னர் திரும்ப நழுவி கீழே வந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம் . நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்ட படி சிறிய உயர்வுகளுடன் கூடிய பெரிய சரிவுகள் சந்தைகளில் வரும் என்றது அது போல சந்தைகள் சிறிய உயர்வினுடன் சரிவடைந்து " பிளாட் " நிலைகளில் முடிவடைந்தது .

நமது சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் தயாராகி வருகிறார்கள் என கருதுகிறேன். இன்றைய சந்தைகள் அதை தான் நமக்கு தெளிவு படுத்தி உள்ளன .

தற்போதைய சூழலில் சந்தைகளின் பக்கம் தலை காட்டாமல் இருப்பதுவே நலம் ஆகவே சந்தைகளை விட்டு தேர்தல் முடிவு வரும் வரை ஒதுங்கி இருங்கள் . நல்லதொரு முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்காக காத்திருப்பதில் தப்பில்லை ..

நிப்டி இன்றய சந்தையில் முக்கிய ஆதரவு நிலையான மற்றும் முந்தய குறைந்த பட்ச விலைகளுக்கு கீழே சென்று அதன் அருகாமையிலே சந்தைகள் முடிவடைந்துள்ளன .

இது வரும் நாட்களில் சந்தையில் பெரும் சரிவினை உருவாக்கலாம் ..

முடிந்த வரை ------------

( பண்டிகை கொண்டாட்டங்கள் , உறவினர் வீடுகளுக்கு செல்லுங்கள் , நன்றாக உறங்குங்கள் , கோழி அடித்து விருந்து சாப்பிடுங்கள் ) அல்லது ரிஸ்க் இல்லாமல் நானில்லை என்பவர்கள் ..

சந்தையின் உச்சங்களில் ஸ்டாப் லாஸ் உடன் செல்லிங் செய்யலாம்

நன்றி !!!

இனி வரும் நாட்களில் பதிவுகள் வழக்கம் போல தொடரும் ...