நேற்றைய சந்தையில் எதிர் பார்த்த உலக சந்தைகளின் வரிசை படி நமது சந்தை 20 புள்ளிகள் அதிகரித்து துவங்கின . பின்னர் சந்தைகள் முன்பு சொன்னது போல " 3655 " நிலைகளை எட்டிபிடிக்க முயற்சித்தது ஆனால் முடியவில்லை அங்கிருந்து கீழிறங்க ஆரம்பித்த சந்தைகள் முக்கிய அதரவு நிலையான " 3600 - 3585 " நிலைகளையும் உடைத்து சென்றது அந்த அளவு சந்தையில் விற்ப்பனை அதிகரித்தது .
நமது உசந்தைகளின் வர்த்தகத்தின் இடையே சிறிய சரிவில் இருந்தன . ஆசிய சந்தைகள் நமது சந்தைகளின் இடை வேளையின் பொழுது நன்றாக சரிவினை நோக்கி சென்றன . ஆசிய சந்தைகள் முடிவில் 2 % - 3 % வரை சரிவில் முடிந்தன . நமது சந்தைகள் முடிவில் அதே போல ஆசிய சந்தைகளின் முடிவினை ஒட்டி 2 % - 3% வரை சரிவில் முடிந்தன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சிறிதளவு லாபத்தினை உறுதி செய்தன என நினைக்கிறேன் . அமெரிக்கா சந்தைகள் 1 % சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் முடிவில் விற்ப்பனை அதிகரித்து 2 % சரிவில் முடிந்தன ..
இன்றைய ஆசிய சந்தைகளின் துவக்கம் சரிவ்ல் துவங்கி உள்ளன . அனைத்து சந்தைகளும் 1 % - 1.5 % வரை சரிவில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் 30 - 40 புள்ளிகள் சரிவில் துவங்கலாம் . இன்றைய சந்தையில் 3520 நிலைகள் இறுதி அதரவு நிலைகளாக கொண்டு வர்த்தகம் தொடங்கும் . இந்த நிலைகள் உடை பட்டாள் சந்தைகளின் சரிவின் வேகம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கிறேன் .
இன்றைக்கு வரவுள்ள ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும் மற்றும் சந்தையின் வேகத்தினை அதிகப்படுத்தும் என நினைக்கிறேன் . அனேகமாக ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைக்கு சாதகமாக வர வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது .
நிப்டி நிலைகள் -- -- - -
அதரவு ---3550 . 3520 , 3480 ..
எதிர்ப்பு --- 3585 , 3600 , 3610 ..
நன்றி !!!
உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது . அது செயலிலும் வேண்டும் ......