வியாழன், 30 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி துவக்கத்தில் ஆசிய சந்தைகளின் உயர்வினை ஒட்டி 40 - புள்ளிகள் அதிகரித்து துவங்கின . பின்னர் சந்தைகள் எதிர் பார்த்தபடி உயர்வுகள் சாத்தியமானது . சந்தைகள் சிறிதும் சரிவின்றி உயரங்களை கடந்து வர்த்தகம் நடக்க தொடங்கின .

போன வார பதிவுகளிளில் குறிப்பிட்டது போல மகாராஷ்டிரா மாநில தேர்தலை முன்னிலை படுத்தி சந்தைகள் உயர்த்தப்பட்டது . நிப்டி முடிவில் 111 புள்ளிகளில் கிட்டத்தட்ட 3 % மேல் உயர்ந்தது . ஆசிய சந்தைகள் அனைத்தும் 3 % உயர்வில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் 1 % அளவிற்கு உயர்ந்து துவங்கின . மேலும் திரு ஒபாமா அவர்கள் அதிபராக தேர்வாகி" 100 " நாட்களின் சிறப்பு கொண்டாட்டங்கள் நடை பெற்றது . இந்த கொண்டாட்டங்களால் நியூயார்க் நகரமே விழாக்கோலம் கொண்டது . சந்தைகளிலும் அந்த உற்சாகம் காணப்பட்டது .

அமெரிக்கா சந்தைகள் நேற்றைய சந்தையில் உயர்வுகளிலேயே வர்த்தகம் ஆனது . சந்தைகள் முடிவில் 2 % - 2.5 % வரை உயர்ந்து முடிந்தன . ஐரோப்பிய சந்தைகளும் 2 % - 2.5 % வரை உயர்ந்து முடிந்தன .

இன்றும் நாளையும் நமது சந்தைகள் விடுமுறை !!!

இன்றைய ஆசிய சந்தைகள் சற்று அளவுக்கு மீறி 3 % - 4 % அதிகரித்து துவங்கி உள்ளன . இதில் ஜப்பானிய சந்தை உயர்வு சற்று சரி என்றே கூறலாம் . ஜப்பானிய சந்தைகள் நேற்று விடுமுறை . அதனால் இந்த உயர்வுகள் உலக சந்தைகள் வரிசைப்படி துவக்கமாக துவங்கி உள்ளன . ஆனால் ஆசிய சந்தைகள் நேற்றும் உயர்ந்து இன்றும் உயந்துள்ளது . சற்று வேடிக்கையாக உள்ளது . இருந்தாலும் இவை அனைத்தும் உலக சந்தைகளின் வரிசையில் இவ்வார இறுதிக்குள் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் .

சரி நமது சந்தைகள் இல்லை நாம் ஆக வேண்டியதை பாப்போம் . இனிதாக விடுமுறைகளை களியுங்கள் நண்பர்களே . !!!

---- நமக்கு தெரியாததை தெரியாது என ஒப்புக்கொள்வது தான் அறிவு -----

நன்றி !!!
அன்புடன்
ரமேஷ்

புதன், 29 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி 20 புள்ளிகள் சரிவில் துவங்கின . ஆனால் பின்னர் சந்தைகள் வெகு நேரம் ஒரே நிலைகளில் நின்று வர்த்தகம் ஆனது பின்னர் உலக சந்தைகளில் நேற்று முன்தினம் நடந்தது போல டவ் ஜோன்ஸ் பியுச்சர் சந்தை மற்றும் ஆசியசந்தைகள் ஐரோப்பிய சந்தைகள் என அனைத்தும் 1 % - 3 % வரை சரிவில் வர்த்தகம் ஆனது .

ஆனால் நேற்று முன்தினம் சந்தையின் சரிவுகள் நிறுத்தப்பட்டன . ஆனால் நேற்றைய சந்தையில் அந்த நிறுத்தங்கள் நடக்கவில்லை . ஆனால் எதிர் பார்ப்புக்கு மீறி சந்தைகள் சரிய ஆரம்பித்தன . அதுவும் ஒவ்வொரு குறைந்த பட்ச புள்ளிகளுக்கும் ஒரு சிறிய உயர்வு அதுவும் வாங்குவது போல ஒருதோற்றதினை உண்டு படுத்தி சந்தைகள் வீழ்ந்தன . ஆக எல்லோரும் எதிர் பார்க்காத வண்ணம் சந்தைகள் வீழ்ந்தன .

அசியசந்தைகள் முடிவில் பெரிய சரிவுகளை எதிர் நோக்கியது . முடிவில் 2.5 % - 3 % சரிவில் முடிந்தன . நமது சந்தைகள் அதையும் மீறி 3 % - 3.5 % வரை சரிவடைந்து முடிந்தன .

நேற்றைய அமெரிக்காசந்தைகள் "பிளாட் " நிலைகளில் துவங்கி பின்னர் இடையில் எந்த வித உயர்வும் இல்லாமல் முடிந்தன . முடிவிலும் சந்தைகள் " பிளாட் " நிலைகளில் வர்த்தகத்தை முடித்து கொண்டன .

இன்றைய ஆசிய சந்தைகள் 2 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . இவை வீழ்ச்சிக்கு பிந்தைய எழுச்சியாக இருக்கலாம் . ஜப்பானிய சந்தைகள் இன்று விடுமுறை தினம் ஆதலால் ஆசிய சந்தைகள் நமது சந்தைகள் துவக்கத்திர்க்காக நாளின் உயரங்களுக்கு அருகாமையில் வர்த்தகம் ஆகி கொண்டுள்ளன . ஆக நமது சந்தைகளிலும் வீழ்ச்சிக்கு பிந்தைய எழுச்சியாக ஒரு உயரங்களும் மற்றும் பியுச்சர் சந்தைகள் முடிவு தினம் மற்றும் நாளைய மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆகியவற்றை வைத்து நமது சந்தைகளில் நல்லதொரு உயர்வுகள் வரலாம் ..

நமது சந்தைகளை இன்று 1.5 % - 2 % வரை உயர்வில் தொடங்கலாம் . அதன் பின்னர் சந்தைகள் பியுச்சர் வர்த்தக முடிவினை வைத்து செயல்படும் . இன்றைய சந்தையில் நுட்ப காரணிகள் எதுவும் ஒத்து வராது .

குறிப்பு -----
*************
நண்பர்களே நுட்ப காரணிகளை பொறுத்த வரை (டெக் அனலிசிஸ் ) எப்போதும் பியுச்சர் சந்தைகள் முடிவு தேதிக்கு இரு தினங்கள் முன்பு இருந்தே ஒத்து வராது . நினைவில் கொள்ளவும் .....

வாழ்க வையகம் . வளர்க தமிழகம்

நன்றி !!!!

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி " 40 " புள்ளிகள் சரிவில் துவங்கி பின்னர் உடனடியாக மீள ஆரம்பித்தது . நாளை பியுச்சர் சந்தைகளின் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாலும் மேலும் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருவதாலும் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல சில காரணங்களாலும் சந்தைகள் கீழிறங்க மறுக்கின்றன .

மேலும் ஆசிய சந்தைகள் நேற்றைய சந்தையில் துவக்கம் முதல் முடிவு வரை 3 % சரிவிலேயே வர்த்தகத்தினை முடித்து கொண்டன . பின்னர் நமது சந்தைகள் இடை வேளையின் போது அமெரிக்கபியுச்சர் சந்தைகள் 1 % - 1.5 % வரை சரிவில் வர்த்தகம் ஆனது . அதனை தொடர்ந்த ஐரோப்பிய சந்தைகளும் 1 % - 1.5 % வரை சரிவில் தொடங்கி வர்த்தகம் ஆனது .


ஆனால் நமது சந்தைகள் இவை எதனையும் பின் தொடராமல் ஒரே நிலைகளில் நின்று மீண்டு வர வர்த்தகம் ஆனது . மீண்டும் வந்தது இடையில் சந்தைகள் சில சரிவுகள் காட்டியது .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் 1.5 % அளவிற்கு சரிவில் துவங்கி வர்த்தகம் ஆனது . முடிவில் அமெரிக்க சந்தைகள் 1/2 % அளவிற்கு சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றைய வீழ்ச்சியின் எழுச்சியாக 1/2 % அளவிற்கு மட்டும் உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளை பொறுத்த வரை 20 - 25 புள்ளிகள் அதிகரித்து துவங்க வாய்ப்புகள் உள்ளன . மேலும் இவ்வார இறுதி வியாழன் மற்றும் வெள்ளி விடுமுறை மற்றும் நாளை பியுச்சர் ஒப்பந்த முடிவு என எல்லாம் ஒன்று சேர்ந்து சந்தைகளின் நகர்வுகளை அதிகப்படுத்தலாம் .

சாதரணமாக சந்தைகளை கீழிறங்க ஆபரேட்டர்கள் விட மாட்டார்கள் .

ஆகவே கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் முடிந்தவரை சந்தையின் போக்கில் வணிகம் செய்யுங்கள் .

நிப்டி நிலைகள் ----

அதரவு --- 3460 , 3410 , 3380 ...
எதிர்ப்பு --- 3491 , 3510 , 3550 ...

உண்மையே பேசுங்கள் ! ஏனெனில் உண்மை தான் பக்திக்கு வழி கட்டுகிறது .

நன்றி !!!

திங்கள், 27 ஏப்ரல், 2009

சனிக்கிழமை பதிவினை படித்து விட்டு தொடரவும் .

இன்றைய ஆசிய சந்தைகள் பலமிழந்து 2 .5 % - 3 % வரை சரிவில் துவங்கி உள்ளன . முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல் ஆசிய சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்யவும் மற்றும் புதிதாக செல்லிங் செல்ல மக்கள் தயாராகி வருவதாக கருதுகிறேன் .

வரும் நாட்களில் இந்த போக்குகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் வரலாம் . மேலும் தங்கத்தில் ஏற்றங்கள் இந்த வாரம் தொடரும் என குறிப்பிட்டுள்ள படி தங்கம் தற்போதைய நுட்ப காரணிகளின் படி " 940 " என்ற அளவில் ஒரு" டபுள் டாப் " நுட்ப காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலைகளை தாண்டி தங்கத்தின் விலைகள் சென்றால் தங்கத்தின் விலைகள் மேலும் கண்மூடி தனமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது ..

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தையில் துவக்கம் ஆசிய சந்தைகளை ஒட்டி இருக்கலாம் . 1.5 % - 2 % வரை சரிவில் துவங்க வாய்ப்பு உள்ளது . பின்னர் நமது சந்தைகள் போன வார இறுதியில் கடை பிடித்த ஆசிய சந்தைகளின் போக்கினை கடைபிடிக்குமா அல்லது சரிவுகள் அதை விட அதிகரிக்குமா என்பது சந்தையின் போக்கை வைத்து அமையும் .

எது எப்படியாகினும் நமது சந்தைகளை பொறுத்த வரை நாளை மறுதினம் பியுச்சர் சந்தைகள் முடிவு தினம் இன்றும் நாளையும் நிலைகளை அதிகமா முடிக்கும் சூழ்நிலைகள் வந்தால் சந்தையில் சற்று அதிகப்படியான சரிவுகளுக்கு வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன் . மேலும் வரும் ஏப்ரல் " 30 " மும்பையில் தேர்த்தல் நடக்க உள்ளது . அதை கணிப்பில் கொண்டு சந்தைகளை நிலை நிறுத்த முயற்சிகள் மேற்க்கொள்ளபட்டாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை என்றும் தோன்றுகிறது .

ஆகவே சந்தைகளில் புதிய்நிலைகள் எடுப்பதை தவிர்க்கவும் . தினசரி வணிகர்கள் சந்தையின் போக்கில் சென்று SL உடன் வணிகத்தில் ஈடுபடவும் .
எனது கணிப்பின் சந்தைகள் இந்த மாத பியுச்சர் முடிவு " 3350 - 3450 " நிலைகளுக்குள் முடிவடையலாம் என நினைக்கிறேன் ..

நிப்டி நிலைகள் ----

அதரவு
--- 3460 , 3410 , 3380 ...
எதிர்ப்பு --- 3491 , 3510 , 3550 ...

முடிந்தவரை பொறுமையை கையாளுங்கள் ... பொறுமைக்கு எல்லை கிடையாது .. பொறுமைக்கு பரிசு நல்லதொரு அங்கிகாரம் ...

நன்றி !!!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

வெள்ளியன்று சந்தைகள் 20 - 30 புள்ளிகள் உயர்வில் சந்தைகள் துவங்கின . பின்னர் சந்தைகள் சிறிது கூட சரிவடையாமல் வர்த்தகம் ஆனது . வெள்ளியன்று பதிவில் குறிப்பிட்டது போல ஆபரேட்டர்கள் சந்தையை உயர்த்தி சென்றனர் . மேலும் சந்தைகள் " 200 " நாளின் சராசரிக்கு மேல் முன்தினம் முடிவடைந்தது அவர்களுக்கு சாதகமாக ஆகி விட்டது . அதனால் அலட்சியமாக கொஞ்சம் கூட சரிவுகள் இல்லாமல் சந்தைகள் உயரங்களை பதம் பார்த்து வணிகம் ஆனது .

ஆனால் ஆசிய சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி சிறிது உயர்வினை கண்டு மறுபடியும் சரிவடைந்தன சந்தைகள் முடிவில் பிளாட் நிலைகளிலே முடிந்தது . ஜப்பானிய சந்தை மட்டும் 2 % சரிவடைந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகள் ஆசிய சந்தைகள் முடிவில் உயரங்களுக்கு அருகாமையில் வணிகம் நடந்து கொண்டு இருந்தன . நமது சந்தைகள் முடிவில் நாளின் உயரங்களுக்கு அருகாமையில் " 57 " புள்ளிகள் அதிகரித்து " 3480 .75 " நிலைகளில் முடிவடைந்தன .

வெள்ளியன்று அமெரிக்காசந்தைகள் சிறிது உயர்வில் துவங்கி பின்னர் நாளின் நெடுகில் சந்தைகள் சற்று உயர்ந்தன . முடிவில் சந்தைகள் 1.5 % - 2 % வரை உயர்வில் முடிந்தன . மேலும் உலக சந்தைகளில் மேலும் தங்கத்தின் விலைகள் உயந்து வருகிறது . இதை பற்றிவல்லுனர்கள் கூறும் பொழுது உலக முதலீடுகள் அனைத்து தங்கத்தின் பக்கம் வருவதாக குறிப்பிட்டுள்ளன . மேலும் இந்தாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலைகள் ( " $ 1200 " PER OUNCE ) பவுன் 14, 000 - 15 , 000 நெருங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் உள்ளது .

ஆகவே நண்பர்களே கவனமிருக்கட்டும் சில அரசியல் காரணங்களுக்காக சந்தைகள் உயந்து வருவதையும் உலக நாடுகளின் பொருளாதார பின்னடைவு நிறுவனங்களின் ஆட்குறைப்பு மற்றும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் என அனைத்து செயல் முறைகளும் எதிர்மறையாக உள்ள சூழலில் சந்தைகள் உயர்ந்து வருகின்றன .

அடுத்த பதிவில் சந்திக்கலாம் . @@@@@@@@@@@

நன்றி !!!

எல்லாம் தெரிந்தவன் பேசுவதில்லை , அதற்காக பேசாதவன் எல்லாம் எல்லாம் தெரிந்தவன் ஆகி விட முடியாது ..

கடந்த வார சந்தைகள் !!!

கடந்த வார சந்தைகள் !!

INDICES == WKLY CLS = CHANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 8707.99 = - 256 .53 .
FTSE = 4155.99 = +63.19.
DOW JONES = 8076.29 = - 55.95.
NASDAQ = 1694.29 = + 21.22 .
HANG SENG = 15258.85 = - 342. 32 .
KOSPI = 1283. 16 = - 45 .29 .
NIFTY = 3480.75 = +96.05 .
SENSEX = 11329 = + 306 .34 .
SGX NIFTY = 3499 = +115 .

*********** ************* ****************

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி முந்தய பதிவில் கூறியது போல ஒரு பெரிய உயர்வினை கொண்டு வந்தது . அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தையில் விளையாடி வருகிறார்கள் . எனக்கு அவர்கள் வர்த்தகம் செய்வது போல தோன்ற வில்லை . மேலும் சந்தைகளின் தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் பொழுது முடிந்தவரை சந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பதே மேல் என எனக்கு தோன்றுகிறது ..

நேற்றய சந்தையில் நிப்டி முக்கிய எதிர் நிலையான " 3410 " புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளன . மேலும் நேற்றய இன்பிலேசன் அறிவிப்புகள் சந்தைகளை கீழே கொண்டு வந்து இருக்க வேண்டும் மாறாக சந்தைகள் உயர்ந்துள்ளன .

சந்தைகள் 3410 நிலைகளுக்கு மேல் செல்வது சந்தையின் ஆரோக்கியமான போக்கினை காட்டினாலும் போன மற்றும் இந்த வார ஆரம்பத்தில் உலக சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகள் நமது சந்தைகளில் எள்ளளவும் இல்லை மாறாக சந்தைகள் அந்த நாட்களில் எல்லாம் உயர்வினை கண்டது உங்களுக்கெல்லாம் நினைவு இருக்கலாம் ..

நேற்றய ஆசியா சந்தைகளை பொறுத்த வரை முடிவில் 1 % - 3 % வரை உயர்வினை கண்டன . ஆனால் நமது சந்தைகள் முடிவில் 4 % உயர்வில் முடிந்துள்ளன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி பின்னர் சந்தைகள் முடிவில் 1 % அளவிற்கு உயர்ந்தன . மேலும் அங்கும் நமது சந்தைகள் போலவே ஆபரேட்டர்கள் சந்தைகளை நிலை நிறுத்தி வைத்துள்ளதாக கருதுகிறேன் . அங்கு பெரிது எதிர் பார்க்கப்பட்ட பெரிய நிறுவனக்களின் காலாண்டு அறிக்கைகள் எல்லாம் சரிவர இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ..

இன்றைய ஆசியா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி உள்ளன . நேற்றே எதிர் பார்த்த லாபத்தினை உறுதி செய்யும் நிலைகள் சந்தையில் வரவில்லை மாறாக சந்தைகள் நேற்றும் உயர்ந்துள்ளன . ஆக இது சந்தைகளில் வரும் நாட்களில் பெரிய சரிவினை கொண்டு வரும் என கருதுகிறேன் .

மேற் சொன்ன அனைத்தினையும் மீண்டும் ஒரு முறை படித்து நினைவில் கொள்க ...

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைக்கு முடிந்த வரை ஆபரேட்டர்கள் சந்தையினை ஓரளவு உயர்த்தி சென்று பின்னர் அங்கிருந்து வேகமானதொரு சரிவினை ஏற்படுத்தலாம் என கருதுகிறேன் . ஆகவே முடிந்த வரை லாங் நிலைகள் எடுக்காமல் இருக்கவும் அல்லது கட்டாயம் " ஸ்டாப் லாஸ் " உடன் வணிகத்தில் ஈடு படுங்கள் . முடிந்தால் புட் ஆப்சனை வாங்குங்கள் .

நிப்டி நிலைகள் -----

அதரவு -- 3380 , 3334 , 3301 ..
எதிர்ப்பு -- 3450 , 3491 ,3510 ...

நன்றி !!!

அன்பே சிவம் , யாரிடமும் பகைமையை காட்டாதீர்கள் , முடிந்தால் அன்பு செலுத்துங்கள் ...


வியாழன், 23 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி முக்கிய அதரவு நிலையான " 3300 " நிலைகள் உடைபட்டு இருப்பது சந்தைகளின் பலவீனத்தை காட்டுகிறது . இருப்பினும் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது . இது ஒரு வகையில் சந்தைகளின் திடீர் உயரங்களை கொண்டு வரலாம் என எதிர் பார்க்கிறேன் ..

மேலும் நமது சந்தைகளில் காலாண்டு அறிக்கைகள் மிகவும் மோசமாக வந்து கொண்டுள்ள சூழலிலும் சந்தைகளின் போக்கை நிர்ணயிக்க முடியவில்லை , இது நேற்றைய சந்தையில் நன்றாக பிரதி பலித்தன . எந்தெந்த பங்குகளின் காலாண்டு அறிக்கைகள் மோசமாக வந்துள்ளதோ அந்த பங்குகளின் டெலிவரி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது கவனிக்கவும் .

நேற்றைய சந்தைகள் முழுவதும் முக்கிய நிலைகள் உடைபடுவதும் பின்னர் மீளுவதுமாக இருந்தது ஆனால் இறுதியில் சந்தைகள் " 3330 " புள்ளிகளில் முடிவடைந்தன . நேற்றைய ஆசியா சந்தையில் 1 % - 3 % அளவிலான சரிவுகளில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் " FLAT " நிலைகளில் துவங்கி பின்னர் மோர்கன் ஸ்டான்லி காலாண்டு அறிக்கைகள் எதிர் மறையாக வந்துள்ளன .. அமெரிக்கா சந்தைகள் முடிவில் " பிளாட் " நிலைகளில் முடிவடைந்தன ...

இன்றைய ஆசியா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி உள்ளன . மேலும் நேற்றைய இழப்பினை மீட்டெடுக்கும் முயற்சியாக இன்றைய ஆசியா சந்தைகள் சற்று மேலே வரலாம் . நமது சந்தைகள் பொறுத்த வரை இன்றும் நல்லதொரு ஏற்ற இறக்கங்களை எதிர் பார்க்கலாம் .

இன்ற இன்பிலேசன் அறிவிப்பு அனேகமாக டேப்லேசன் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது . (மேலும் தேர்தலை மையமாக வைத்து ஊக்க அறிவிப்புகள் எதுவும தர கூடாது )டேப்லேசன் அறிவிப்புகள் வராமலும் போக வாய்ப்பு உள்ளது . ஏன் இன்பிலேசன் அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது . அல்லது இன்பிலேசன் சற்று குறையலாம் ..

எது எப்படியாகினும் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் வாங்குவது நிறுத்தும் வரை சந்தைகளின் சரிவுகள் சற்று நிறுத்தப்படலாம் என நினைக்கிறேன் ..

நிப்டி நிலைகள் ----
அதரவு --- 3301 , 3275 , 3240 ..
எதிர்ப்பு --- 3335 , 3380 , 3410 ..

நன்றி !!!
எல்லா புகழும் இறைவனுக்கே !! அவன் ஒருவன் தான் உலகின் உயர்ந்தவன்

புதன், 22 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி முன்தினம் கூறியது போல 50 புள்ளிகள் சரிவில் துவங்கி பின்னர் மீள ஆரம்பித்து . பின்னர் சரிவடைந்து இடையில் எதிர் பார்த்து போல ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிக்கை வெளியிட்டது அதனால் சந்தைகள் சரிவில் இருந்து முழுவதும் மீண்டு " flat " நிலைகளில் முடிவடைந்தன . ஆனால் சந்தைகள் இடையில் இறக்கங்கள் சற்று அதிகமாகவே இருந்தது .

நேற்றைய சந்தையில் ஆசிய சந்தைகள் காலை துவங்கிய அதே நிலைகளில் 3.5% - 4 % வரை சரிவுகளில் முடிவடைந்தன . ஆனால் நமது சந்தைகள் சரிவுகள் எதுவும் இல்லாமல் " FLAT " நிலைகளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் முந்தய வீழ்ச்சியின் எழுச்சியாக 1.5 % - 2.5 % வரை அதிகரித்துள்ளது . மேலும் இன்னும் சில பிரச்சனைகள் வரும் நாட்களில் வரவுள்ளன . வரும் நாட்களில் உலக சந்தைகள் இனி லாபத்தினை உறுதி செய்யும் ..

இன்றைய ஆசிய சந்தைகள் " FLAT " நிலைகளை சரிவில் துவங்கி உள்ளன . சந்தைகளுக்கு போதுமான வலு இல்லை என நினைக்கிறேன் . மேலும் இது வரை வந்த ஊக்க அறிவிப்புகள் சந்தைகளை ஓரளவு நிலை நிறுத்தி மீள செய்துள்ளன . ஆகவே உலக சந்தைகளில் அடுத்த செய்திகள் வரும் வரை சந்தைகள் குறிப்பிட்ட புள்ளிகள் இடையில் வர்த்தகம் நடக்கலாம் .

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தைகள் 10 - 15 புள்ளிகள் வரை உயர்வில் துவங்க வாய்ப்பு உள்ளது . மேலும் சந்தைகள் கடந்த சில தினங்களாக சந்தையில் நடக்கும் வர்த்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

நிப்டி கடந்த ஒருவார காலமாகவே " 3350 -3500 " நிலைகளுக்கு இடையில் வர்தகமாகி வருகின்றன . மேலும் உலக சந்தைகள் சரிவடையும் நிலையிலும் நமது சந்தைகள் சரிவடையாமல் நிறுத்த படுகிறது . இவற்றை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் ஒரு பெரிய உயர்வுக்கு தயாராக உள்ளதாக கருதுகிறேன் .

நிப்டி தற்சமய வர்த்தகங்களின் படி 3300 நிலைகள் உடை படாத வரை சந்தைகள் கீழிறங்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன . மேலும் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் (முதலீடு முந்தய பதிவில் குறிப்பிட்டது போல) இந்த மாத இறுதி வரை குறைய வாய்ப்புகள் இல்லை என கருதுகிறேன் .

நிப்டி நிலைகள் ----

அதரவு --- 3334 , 3301 , 3275 ..
எதிர்ப்பு --- 3380 , 3410 , 3450 ...

நன்றி !!!

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி 20 புள்ளிகள் அதிகரித்து துவங்கின . பின்னர் வேகமாக முன்னேறி நாளின் உயரங்களை தாண்டி வணிகம் ஆனது . இந்நிலையில் சந்தைகள் " 3450 " என்ற கடினமான எதிர்ப்பை தாண்டி செல்ல முயன்றது . ஆனால் ஆசியசந்தையில் விற்ப்பனை அதிகரித்ததால் ஆசிய சந்தைகள் மற்றும் அமெரிக்கபியுச்சர் சந்தைகள் நமது சந்தைகளின் இடைவேளையின் போது 2 % சரிவில் வர்த்தகம் நடக்க தொடங்கியது .

அதன் பின்னர் நமது சந்தைகளில் செல்லிங் அதிகரித்தது . ஆனாலும் நமது சந்தைகளில் பெரிதாக சரிவுகள் எதுவும் வரவில்லை . மேலும் சந்தைகள் முடிவின் போது முந்தய புள்ளிகளை விட 7 புள்ளிகள் சரிவு அடைந்து "3370 " நிலைகளில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் பெரிய அளவு விற்ப்பனை மற்றும் செல்லிங் இருந்தது . இதனால் சந்தைகள் பெரிய அளவிலான சரிவினை கண்டது . மேலும் சந்தைகள் முடிவில் 3 % - 4% வரையிலான சரிவினை கண்டது . அமெரிக்க சந்தைகளில் பெரிது எதிர்பார்க்கப்பட்ட " BOA " "IBM " போன்ற நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் திருப்பதியாக இல்லை . லாபம் சரிவடைந்துள்ளது . ஆகவே சந்தைகளில் சரிவுகள் அதிகரித்தன .

முந்தய பதிவில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன் . மேலும் உலக சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்ய தயாராகி விட்டதாக உணர்கிறேன் .

இன்றைய ஆசிய சந்தைகள் 3 % - 4% வரை சரிவில் துவங்கி உள்ளன . அமெரிக்க சந்தைகளின் நகர்வினை ஒட்டி பிற சந்தைகள் நகர்வினை ஆரம்பித்துள்ளன . மேலும் நமது சந்தைகள் தவிர அனைத்து சந்தைகளும் உலக சந்தைகளை பின்பற்றி வருகின்றன என முந்தய பதிவில் குறிப்பிட்டது நினைவு இருக்கலாம் .

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தையில் " 50 " புள்ளிகள் வரை சரிவில் துவங்க வாய்ப்பு உள்ளது . ஆனால் சந்தைகள் அந்த கீழ் நிலைகளில் இருந்து மீள ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன் . முடிந்த வரை சந்தையின் போக்கில் வணிகம் செய்ய முற்படுங்கள் அல்லது சந்தையில் இருந்து வெளியே இருந்து வேடிக்கை பாருங்கள் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது உள்ளே செல்லுங்கள் .

இன்றைய சந்தையில் நிப்டி " 3301 " ஐ முக்கிய அதரவு நிலையாகவும் " 3410 " முக்கிய எதிர் நிலையாகவும் இருக்கும் . இவற்றில் எந்த நிலைகள் உடை பட்டாலும் அதன் போக்கில் சந்தைகள் செல்ல ஆரம்பிக்கும் . ஆனால் நகர்வுகள் சற்று அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கிறேன் .

நமது சந்தைகளில் பெரிதாக உலக சந்தைகளின் தாக்கம் இருக்காது . இந்நிலைகளில் சந்தைகளில் " SHORT SELLING " செல்ல வேண்டாம் . மேலும் இன்றைய ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் சந்தைக்கு உற்சாகமானதாக இருந்தால் சந்தையில் பெரிய அளவிலான உயர்வு சாத்தியம் , இல்லாவிட்டாலும் பெரிய அளவிலான சரிவுகள் வர வாய்ப்புகள இல்லை என்றே கருதுகிறேன் .

கடந்த ஒரு வார காலமாகவே அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள் எனபது நினைவில் கொள்ளவும் . மேலும் அவர்களின் வாங்கும் விதத்தின் அளவும் பெரிய அளவில் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது . ஆகவே அவர்கள் சந்தையை பெரிய அளவில் கீழிறங்க விட மாட்டார்கள் . ஆக பெரிய அளவிலான சரிவுகள் வரும் பொழுது அப்போதைய சந்தை நிலவரத்தை பொறுத்து வாங்குங்கள் . முடிந்த வரை உடனுக்குடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் .

தினசரி வணிகர் கட்டாயம் " SL " உபயோக படுத்தவும் . மேலும் " லாங் " நிலைகள் எடுத்து வைக்க வேண்டாம் . சில அரசியல் காரணங்களுக்காக சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதை நினைவில் கொள்ளவும் . அதையும் மீறி லாங் வைத்துள்ளவர்கள் " ஹெட்ஜ் " செய்து வைக்கவும் ..

நிப்டி நிலைகள் ---- -

அதரவு --- 3334 ,3301 , 3275 ...
எதிர்ப்பு --- 3380 ,3410 , 3275 ...

நன்றி !!!

திங்கள், 20 ஏப்ரல், 2009

வணக்கம் நண்பர்களே ,,,
இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் "FLAT " நிலைகளில் வர்த்தகத்தை துவங்கி உள்ளன . வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் " FLAT " நிலைகளில் முடிந்துள்ளன இது வெள்ளி மட்டுமல்ல கடந்த வாரம் முழுவது இதே நிலை நீடித்துள்ளது ..

நமது சந்தைகளில் காலாண்டு அறிக்கைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான தகவல்கள் வரும் நாட்களில் வர உள்ளதால் சந்தைகள் முடிந்த அளவு ஆப்றேடர்களால் நிலை நிறுத்த முயற்சி மேற்க்கொள்ளப்படும் என நினைக்கிறேன் ..

ஆசிய சந்தைகளில் வரும் நாட்களில் லாபம் கருதி லாபத்தினை உறுதி செய்ய முன் வரலாம் என கருதுகிறேன் . இது உலக சந்தைகளில் தொடரும் பட்சத்தில் சந்தைகள் தற்சமயம் சில குறிப்பிட்ட நிலைகளுக்குள் வர்த்தகம் நடக்கலாம் ,.

எது எப்படி யாகினும் நமது சந்தைகள் வரும் ஏப்ரல் மாத பியுச்சர் சந்தைகள் இறுதி நாள் வரை சந்தைகள் பெரிதாக எதுவும் இறங்க வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன் .

நிப்டி நிலைகள் ----

அதரவு
--- 3380 , 3334 , 3301 ,
எதிர்ப்பு --- 3410 , 3450 , 3491 ,

நன்றி !!!

சனி, 18 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி காலை துவக்கத்திலேயே 30 புள்ளிகள் வரை அதிகரித்து துவங்கின . பின்னர் சந்தைகள் வேகமாக மேலே உயர தொடங்கின . ஆசிய சந்தைகள் துவக்கம் முதலே " FLAT " நிலைகளிலே வர்த்தகத்தினை முடித்து கொண்டன . ஆனால் நமது சந்தைகள் வேகமாக முன்னேறி நாளின் உயரங்களை கடந்து " 3500 " புள்ளிகள் வரை சென்றன . பின்னர் மதியத்திற்கு மேல் சந்தைகள் வேகமாக சரிய தொடங்கின .

காரணமில்லாமல் தைவான் சந்தைகள் " 5 % " வரை சரிவு அடைந்து முடிந்தன .

நமது சந்தைகள் முடிவில் முக்கிய ஆதரவு நிலைகளான " 3450 " இல் சந்தைகளை நிறுத்த முடிந்த வரை முயற்சி மேற்க்கொள்ளப்பட்டதாக தெரிகிறது . ஆனால் சரிவினை தடுக்க முடியவில்லை தொடர்ச்சியாக சந்தைகள் சரிய தொடங்கின .

அதன் பின்னர் சந்தைகள் அடுத்தடுத்த ஆதரவு நிலைகளான " 3410 , 3380 ," ஆதரவு களையும் இழந்தன . பின்னர் முந்தய நாளின் குறைந்தபட்ச புள்ளிகளான " 3362.10 " ஐயும் உடைத்து " 3354. 50 " வரை சந்தைகள் சரிவினை அடைந்தது குறிப்பிடத்தக்கது . கடந்த சில தினங்களாக சந்தைகள் குறைந்த பட்சம் மூன்று அதரவு அல்லது எதிர்ப்பு நிலைகளை பதம் பார்க்கின்றன ..

நேற்றய அமெரிக்காசந்தைகள் வழக்கம் போல " FLAT " நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டுள்ளன . அமெரிக்கா சந்தைகளை பொறுத்தவரை இந்த வாரம் பெரிதாக உயர்வுகள் எதுவும் இல்லை (ஏன் எனில் அமெரிக்கா சந்தைகளில் காலாண்டு அறிக்கைகளை வைத்து பெரிய சரிவுகள் எதிர்பார்க்கப்பட்டது ) . எதிர் பார்க்கப்பட்ட அனைத்து காலாண்டு அறிக்கைகளும் நேர் மறையாக வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது ...
இருந்தாலும் இந்த நேர் மறை அறிவிப்புகள் அனைத்து சந்தையின் சரிவினை தடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என கருதுகிறேன் ...

நன்றி !!

தற்பெருமை எங்கே முடிவடைகிறதோ அங்கே ஒழுக்கம் ஆரம்பம் ஆகிறது ...

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் !!!

பங்கு சந்தை பற்றிய சில விபரங்கள் மற்றும் சந்தையின் சிறப்பம்சங்களை எனது பதிவுகளில் தெரிந்து கொண்டீர்களா ?

நண்பர்களே !!!!!
இன்றைய சந்தை நிலைமைகளை வைத்து அந்நிய முதலீட்டாளர்களை பற்றி ஒரு பதிவு எழுதலாம் என தோன்றியது உடன் உங்கள் முன் பார்வைக்கு ...

நமது சந்தைகளில் ( நான் பங்கு சந்தை ஒரு அலசலில் கூறியது போல ) சிறு முதலீட்டாளர்கள் , நீண்ட கால முதலீட்டாளர்கள் , தினசரி வணிகர்கள் அந்த வரிசையில் DII'S - " DOMESTIC INSTITUTIONAL INVESTOR , HNI 'S - HIGH NETWORTH INDIVIDUAL INVESTOR , QNI 'S - QUALIFIED NETWORTH INDIVIDUAL INVESTOR -- இவர்களுக்கு அடுத்த படியாக வருபவர்கள் தான் - FII 'S - FOREIGN INSTITUTIONAL INVESTOR ... என்கிற இந்த அந்நிய முதலீட்டாளர்கள் ...

சரி அந்நிய முதலீட்டாளர்கள் என்றால் யார் ? எப்படி நமது சந்தைக்கு வருகின்றனர் ? ஏன் வருகின்றனர் ? ...

அந்நிய முதலீட்டாளர்கள் என்பவர் வெளி நாடுகளில் இருந்து உலக சந்தைகளில் வர்த்தகம் செய்யவரும் ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு பரஸ்பர நிதியகங்கலாகவோ இருக்கலாம் . இவர்களின் குறிக்கோள் லாபம் பர்ப்ப்பது மட்டும் தான் . பின்னர் சந்தைகளில் ஒரு அபரீத வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை ஏற்ப்படுத்தி லாபம் பர்ப்ப்பர்கள் அது தான் அவர்களின் வேலை ..

இவர்கள் பங்கு சந்தைகளை நெறிமுறை படுத்தும் அமைப்பான செபி இன் அனுமதி பெற்று பின்னர் கணக்குகள் துவங்கி சந்தைகளில் குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்யலாம் என செபி ஆணை வழங்கிய பிறகு அவர்கள் வர்த்தகத்தினை தொடங்கலாம் .

இவர்களுக்கென அரசு பல சட்டதிட்டங்களை வகுத்து அதை நெறிமுறை படுத்தி "p " " notes " என்று பெயரிட்டுள்ளது . இந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ள படி தான் அந்நிய முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் மீறினால் செபி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் .

இந்த " p " "notes " இல் அவர்களுக்கு தரப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் சில விபரங்கள் , வியாபார ஒப்பந்தங்கள் , வியாபார முறைகள் மற்றும் தினசரி வணிகத்தின் அளவுகள் போன்ற விபரங்கள் இருக்கும் . இதில் அவ்வப்போது தேவைப்படும் பொழுது அரசு சில மாற்றங்களை கொண்டு வரும் ஏனெனில் சந்தை முழுவதும் அவர்களிடம் செல்லாமல் இருக்க மற்றும் சந்தைகளில் ஒரு நிலையான போக்கினை ஏற்ப்படுத்த ...

தற்சமய நிலை என்ன ?
தற்போழுது சந்தைகள் அந்நிய முதலீட்டாளர்கள் கைபொம்மை ஆகி விட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே காரணம் நமது மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து விட்டது ஏனென்றால் அனைவரும் அதிக பட்ச விலைகளில் அதிக பங்குகளை வாங்கி வைத்துள்ளனர்.

நாம் அவர்களுக்கு நிகராக வர்த்தகம் செய்ய சந்தையில் தற்சமயம் யாரும் இல்லை . ஏன் முக்கிய நபர்களான DII'S, QNI'S ,HNI'S இவர்கள் கூட இன்று சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களை நிறுத்த முடியவில்லை .

இதே சிறிது காலங்களுக்கு முன்பு இவர்கள் அந்நிய முதலீட்டளர்களுக்கு எதிராக நின்று சந்தையை வலுஉள்ளதாக மாற்றினார்கள் . ஆனால் தற்போதைய நிலையில் சந்தையின் போக்கினை மாற்ற கூடிய அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் உருவெடுத்துள்ளனர் . ஆதலால் இவர்கள் சக்தி சற்று குறைந்து விட்டது .

அந்நிய முதலீட்டாளர்களை பொறுத்த வரை ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு கட்டமைப்பு இன்ன பிற தொழில் வளர்ச்சிகள் நன்றாக உள்ளது அல்லது வரும் காலத்தில் சிறப்பபாக இருக்கும் என கருதினால் அவர்கள் அதிக அளவு தொகையினை முதலீடு செய்வார்கள் .

அவர்கள் எடுத்து வரும் தொகையானது USD $ ஆக வரும் பொழுது சாதரணமாக சந்தையில் ஒரு பெரிய தொகையாக வந்து சேரும் . அரசாங்கமும் சந்தையின் நலன் மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் முதலீடு செய்யும் தொகையினை சமயத்தில் அதிகரிப்பார்கள் மற்றும் சில சலுகைகளையும் வர்த்தக சம்பந்தமாக அறிவிப்பார்கள் . இவர்களால் தான் சந்தைகள் ஒரு பெரிய அளவில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டாகிறது ..

நன்றி !!!

மீதி அடுத்த இடுகையில் தொடரவும் .......

ஓங்கி உயர்ந்த இந்த வார அண்ணாச்சிகள்

ஓங்கி உயர்ந்த இந்த வார அண்ணாச்சிகள் -----

நண்பர்களே இந்தவாரம் சந்தையில் சில பங்குகள் விலைகள் அதிகமாக அதிகரித்துள்ளது .. அவற்றின் விபரங்கள் ------

பங்கின் பெயர் ---- அதிகரித்த %
***********************************
எஸ் பி ஐ - 14 . 8 %
ஐ சி ஐ சி ஐ - 1 1 %
ஆக்ஸ்சிஸ் - 14. 8 %
யுனிடெக் - 24 .50 %
ஹச் டி ஐ எல் - 8 %
ஏபி பி - 10.05 %
பி ஹச்ஈ எல் - 9 . 9 %
கார்வார் ஆப்சொர் - 4 1 %
எல்ஐ டி எல் - 2 5 % ....

******************************************************
கடந்த வார சந்தைகள் !!
INDICES == WKLY CLS = CHANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 8907.58 = - 56 .53 .
FTSE = 4092.80 = +109.09.
DOW JONES = 8131.33 = + 47.95.
NASDAQ = 1673.07 = + 20.53 .
HANG SENG = 15601.27 = + 699 .72 .
KOSPI = 1329.04= - 35.29 .
NIFTY = 3384.40 = + 42.05 .
SENSEX = 11023 = + 220 .34 .
SGX NIFTY = 3385.50 = -26 .

*********** ************* ****************

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தைகள் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல துவக்கத்தில் மேல் நிலைகளில் துவங்கி பின்னர் சரிய ஆரம்பித்தன . நமது சந்தைகளை பொறுத்த வரை உலக சந்தைகளில் உயர்வுகள் வரும் பொழுது சரிவுகள் வரும் என நான் முன்பு குறிப்பிட்டது நினைவு உள்ளதா நண்பர்களே !!!

நேற்றைய சந்தையில் நிப்டி முக்கியமான ஆதரவு நிலையான 3450 , 3405 , 3380 என மூன்று நிலைகள் உடை பட்டு முடிவுற்றது குறிப்பிட தக்கது . மேலும் 3435 to 3450 நிலைகளுக்குள் மூவிங் சராசரி உள்ளது . வரும் வர்த்தக தினங்களில் சந்தைகள் 3410 நிலைகளுக்கு மேல் சென்றால் தான் காளையின் ஆதிக்கம் சற்று வெளிப்படும் என கருதுகிறேன் .

நேற்றய ஆசிய சந்தைகள் அனைத்தும் " FLAT " நிலைகளிலே தங்கள் வர்த்தகத்தினை முடித்து கொண்டன . சந்தைகள் முடிவில் சிறிது உயர்வில் முடிந்தன . சீனாவில் எதிர் பார்த்தபடி வந்த ஜி டி பி டேட்டா சற்றே குறைந்துள்ளது அந்த சந்தைகளில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி சீன சந்தைகள் சற்று சரிவில் முடிந்தன .

நேற்றய அமெரிக்கா சந்தைகள் சிறிதளவு உயர்வில் துவங்கின பின்னர் இடையில் சந்தைகள் சிறிதளவு சரிவினை கண்டன . முடிவில் சந்தைகள் 1 % - 2 % வரை உயர்வினை கண்டன .

இன்றைய ஆசிய சந்தைகள் துவக்கத்தில் 2 % உயர்வில் துவங்கி உள்ளன , நமது சந்தைகளும் 30 TO 40 புள்ளிகள் வரை உயர்வில் துவங்க வாய்ப்பு உள்ளன . 3410 நிலைகளுக்கு மேல் சந்தைகள் நிற்காத பட்சத்தில் சந்தையில் விற்பனை அதிகரிக்கலாம் . இன்றைய சீன சந்தைகள் 2 % வரை சரிவில் துவங்கி வர்த்தகம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது . ஆசிய மற்றும் ஜப்பானிய சந்தைகள் முழுவது அமெரிக்கா சந்தைகளை பின் பற்றி வருகிறது . நமது சந்தைகள் தவிர !!!

நிப்டி நிலைகள் -----

அதரவு
--- 3342 , 3301 , 3275 ...
எதிர்ப்பு --- 3400 , 3410 , 3450 ....

நன்றி !!!

நண்பர்களே !!!

இளம் வயதில் கவனமின்றி துள்ளினால் , வயதான களத்தில் வருந்த வேண்டி வரும் .........

வியாழன், 16 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் எதிர் பார்த்தது போல் இன்போசிஸ் காலாண்டு அறிக்கை வருவாய் இழப்புடன் வந்தது . உலக சந்தைகள் பலவும் நேற்று முன்தினம் 2 % வரை சரிவில் முடிந்தன . ஆக இவற்றை வைத்து பார்க்கும் போது நமது சந்தைகள் 5 % வரை சரிவில் தொடங்கி இருக்க வேண்டும் . ஆனால் மாறாக துவக்கத்தில் 2 % வரை சரிவில் துவங்கி பின்னர் உடனடியாக சந்தைகள் இழப்பினை மீட்டு முக்கிய எதிர் நிலை மற்றும் ௨00 நாளின் மூவிங் சராசரியான " 3450 " புள்ளிகளை வெகு சுலபத்தில் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது . முடிவில் சந்தைகள் " 3492 " புள்ளிகளில் நிலை கொண்டது .

ஆசிய மற்றும் ஐரோப்பியசந்தைகள் பலவும் நேற்றய சந்தையில் 2 % to 3 % வரை சரிவில் துவங்கின . பின்னர் நமது சந்தைகளின் போக்கை கண்டு அனைத்து சந்தைகளும் மீண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது .ஆசிய சந்தைகள் முடிவில் 1/2 % to 1 % வரை உயர்ந்து முடிந்தன .. ஆனால் நமது சந்தைகள் முடிவில் 3 % வரை உயர்ந்தன என்பது குறிப்பிட தக்கது .

அமெரிக்காசந்தைகள் முந்தய தினத்தின் சரிவினை சரிகட்ட சுமார் 1 % அளவிற்கு உயர்ந்தன . அங்கு இன்னும் சில தினங்களுக்கு சில நிறுவனங்களின் கலந்து அறிக்கைகள் வரவுள்ளன என்பது குறிப்பிட தக்கது ..

இன்றைய ஆசிய சந்தைகள் மிகவும் எதிர் பார்ப்பில் இருந்த சீன அரசின் ஜி டி பி பற்றிய அறிவிப்பு எதிர் பார்த்த அளவிலே இருந்தது .. ( நம்ம ஊர் பாணியில் சொன்னால் முதலுக்கு மோசமில்லை என்பது போல ) சந்தைகள் குழப்பமான சூழலில் வர்த்தகத்தினை தொடர்ந்தன ..

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய வர்த்தகத்தில் பழைய நிலைகள் மற்றும் பண்டமண்டல் பொறுத்து வணிகமாகலாம் .. முடிந்த வரை தினசரி வர்த்தகர்கள் கட்டாயம் sl உபயோக படுத்தவும் ..

நன்றி !!!

நல்ல எண்ணம் , நல்ல செயல் , நல்ல புத்தி உடையவர்கள்
நல்ல மனிதர்கள் , அவர்கள் நட்பு கிடைத்தால் புறக்கணித்து விடாதீர் !!!

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் 1 !!!

பதிவினை தொடரலாமா ???

சரி அந்நிய முதலீட்டாளர்கள் வாங்குவதால் சந்தைகளுக்கு நன்மை தானே மேலே செல்லாமல் ஏன் சந்தைகளில் சரிவுகள் வருகிறது ? ..

இவர்கள் பங்குகளை வாங்கி மட்டும் விற்ப்பனை செய்வது இல்லை . விற்றும் வியாபாரம் செய்வார்கள் நாம் செய்வது போல " SHORT SELLING " முறையில் இவர்களுக்கும் அனுமதி உண்டு . ஆனால் இவர்களுக்கு அதெற்கென ஒரு அளவு இருக்கும் அதை மீறி விற்க கூடாது .

ஆனால் நமது நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தினசரி வணிகர்களின் மனநிலையை புரிந்து கொண்டு குறிப்பிட்ட ஒரு குறைந்த பட்ச புள்ளிகளுக்கு அல்லது விலைகளுக்கு கீழே பங்குகளின் விலைகளை கொண்டு செல்வர்கள் .

அதனால் நமது வணிகர்கள் அதிக நஷ்டத்தினை தடுக்க மற்றும் " MTM " இழப்பை கட்ட முடியாமலும் குறைவான நஷ்டத்தில் சந்தையில் இருந்து வெளிவருவார்கள் . அவர்கள் அந்தநிலைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கும் படலத்தை ஆரம்பிபர்கள் .

அடுத்த நாள் சந்தைகளில் அதன் விலைகள் உயரும் நமது முதலீட்டாளர்கள் நஷ்டத்தினை குறைக்க திரும்ப விலை அதிகரிக்கும் என வாங்குவார்கள் வாங்கும் பொழுது அவர்கள் விற்று லாபம் பார்த்து வெளியேறுவார்கள் . இதற்க்கு முக்கிய காரணம் இவர்களின் பண பலம தான் .

சந்தை தவிர இவர்களின் முதலீடுகள் ???

அந்நிய முதலீட்டாளர்களை பொறுத்த வரை லாபம் சம்பாதிப்பது மட்டும் தான் குறிக்கோள் . வேறு எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் . இவர்கள் சந்தை முதலீடு உடன் நிறுத்த மாட்டார்கள் . நாளுக்கு நாள் என சந்தையையே மாற்றுவார்கள் . ஒரு சந்தையில் இருந்து இன்னொரு சந்தைக்கு முதலீடுகள் மாறும் .

அவற்றோடு அல்லாமல் தங்கம் மற்றும் உலோகங்கள் , கச்சா என்னை , மற்றும் கரன்சி வர்த்தகத்திலும் முதலீடு செய்வார்கள் ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என யாராலும் கணிக்க முடியாது . இவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உட ன்சந்தையை விட்டு வேகமாக உள்ளே வந்ததை விட விரைவாக வெளியே செல்வர்கள் ,.

DII'S --- HNI 'S ---- QNI 'S ,...

இதில் DII'S இல் வருபவர்கள் உள் நாட்டு பெரிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் . HNI"S என்பவர்கள் பெரிய பொருளாதார வசதி கொண்ட முதலீட்டாளர்கள் தான் . QNI'S என்பவர்கள் தனி நபர்களாக சந்தையில் அதிக தொகையினை முதலீடு செய்பவர்கள் . இவர்கள் அனைவரும் இருப்பதால் தான் சந்தைகள் சில சமயம் பெரிய சரிவுகளில் இருந்து தடுக்க படுகின்றன . மேலும் ஓரளவாவது இவர்களுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள் .

இவர்களுக்கு மேல் ஒரு பெரிய அதி புத்தி சாலிகள் ???

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு தொகையை சந்தைகளில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாள்கள் அல்லது குறிப்பிட்ட லாபம் வரும் வரை பங்கின் விலைகள் இறங்கினாலும் பங்குகளை விற்க மாட்டார்கள் . ஆனால் முதலீட்டு தொகையில் சிறிது இறங்கினாலே சந்தையில் இருந்து புலி பாய்ச்சலில் வெளி வருப்பவர்கள் தான்" ஹெட்ஜ் பண்டு " என்று கூறப்படுபவர்கள் .

இவர்களுக்கு அதிக லாபம் முக்கியமல்ல ஆனால் முதலீடு குறையாமல் பார்த்து கொள்வார்கள் முதலீடு குறைந்தால் எதை பற்றியும் கவலைப்படாமல் சந்தையை விட்டு வெளியேறிவிடுவார்கள் .. அதனால் தான் சந்தைகள் சில சமயங்களில் வேகமாக சரிகிறது ..

நன்றி !!!

அன்புடன்
ரமேஷ்

23 நாட்கள் 900 புள்ளிகள் உயர்வு நிப்டி இன் சாதனை பாரீர் !!!

இது பங்கு சந்தையா அல்லது கண் கட்டி வித்தையா என்பது போல் நமது சந்தைகளின் வர்த்தகம் தற்பொழுது நடை பெறுகிறது . நுட்ப வரைபடங்களையும் சாராமல் மற்றும் பண்டமண்டல் செய்திகள் சாராமலும் கிட்டத்தட்ட கடந்த " 35 " தினங்களில் " 23 " வர்த்தக தினங்கள் நிப்டி ஏறு முகமாகவே இருந்தது . ஒரே ஒரு வர்த்தக தினம் மட்டும் சரிவில் முடிந்துள்ளன . " 22 " வர்த்தக தினங்கள் உயர்வில் முடிந்துள்ளன .

இது சாத்தியம் தானா ???

தற்பொழுது சந்தைகள் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேடர் கைகளில் உள்ளது . இதை சந்தைகள் அடிக்கடி உயர்வில் முடிந்து நமக்கு அறிவுறுத்துகிறது .. சந்தைகள் தற்போது உள்ள நிலைகளில் சில்லறை முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வரவில்லை என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

என்ன தான் சந்தைகள் உயர்ந்தாலும் சிறிதளவாவது சரிவுகள் வந்து தான் சந்தைகள் திரும்ப ஏறு முகத்தில் செல்ல வேண்டும் . இதை நுட்ப வரை படங்களின் படி " technical correction " என்று கூறப்படுகிறது . எவ்வித சரிவுகள் மற்றும் இறக்கங்கள் இல்லாமல் செல்வது சந்தைகளை பொறுத்த வரை ஆபத்துதான் ..

நமது சந்தைகள் கிட்டத்தட்ட "22 " வர்த்தக தினங்கள் அது போல உயர்த்தி செல்லப்பட்டுள்ளது . அதன் உயரங்களின் அளவு கீழ் நிலைகளில் இருந்து சுமாராக 30 % அளவிற்கு உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . "retracement " அளவுகளின் படி 0 வில் இருந்து (0 என்பது சரிவின் இறுதி நிலை ) தொடர்ச்சியாக 23.60 % , 38.20 % ,50 % , 61.80 % , 100 % என்று உயர்விலும் சரிவிலும் ஒரு கணக்கு உண்டு . அதை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் கீழ் நிலைகளில் இருந்தது தற்போதைய நிலைகள் 80 % உயர்வு ஆகும் .

உலக சந்தைகள் அனைத்தும் அவைகளின் ஆயுட்கால குறைந்த பட்ச விலைகளுக்கு கீழ் சென்று பின்னர் திரும்பி அதிலிருந்து மீண்டு வந்து உள்ளன ..
அதுவும் சுதாரித்து வெகு நாட்களுக்கு பிறகு ...

நமது சந்தைகளை பொறுத்த வரை பண்ட மண்டல் காரணங்களின் பொழுது சந்தையை சிறு பாதிப்படைந்ததாக காட்டி விட்டு பின்னர் ஆபரேடர் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையை மேலே கொண்டு செல்கின்றனர் .

உதா
--

* உலக சந்தைகளின் சரிவின் பொழுது நமது சந்தைகள் துவக்கம் மட்டும் கீழே பின்னர் உடனடி இழப்பினை சரி செய்தல் ..

* அத்துடன் அல்லாமல் நாளின் உயரங்களில் முடிவடைதல் ..

* நமது நாட்டின் ஏற்றுமதி குறித்த அறிவிப்பு சமீபத்தில் 30 % சரிவு . அன்றைய தினம் சந்தைகள் 4 % உயர்வு ..

* ஐ ஐ பி டேட்டா -1 . 2 % சரிவு .
அன்றைய தினம் சந்தைகள் 2. 5 % to 3 % வரை உயர்வு

* பெரிதும் எதிர் பார்த்த இன்போசிஸ் காலாண்டு அறிக்கையில் இது வரை நிறுவனம் தராத வருவாய் இழப்பு , இனி வரும் காலங்கள் வருவாய் குறைய வாய்ப்பு உள்ளது .என தெரிந்து அன்றைய தினம் சந்தைகள் 3.5 % to 4 % வரை உயர்ந்துள்ளது .

சாதரணமாக நமது சந்தைகள் 20 to 40 புள்ளிகள் அதிகரித்தால் குறைந்தது 10 புள்ளிகள் சரிவுகள் வரும் . ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களாக சிறிய அளவிலான சரிவுகள் கூட வரவில்லை . நிப்டி மொத்தம் 900 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது ..

எனது கணிப்பின் படி சந்தைகளில் பெரிய அளவில் ஏதோ ஒன்று நடக்க உள்ளதாக தோன்றுகிறது .. சுதாரித்து கொள்ளுங்கள் .முதலீட்டாளர்கள் ஓரளவு நஷ்டம் உள்ள பங்குகளையும் இந்நிலையில் விற்று வெளிவருவது நலம் ,,

சந்தைகள் கீழே வரும் பொறுங்கள் ....

நன்றி !!!

சத்யம் ஒரு அலசல் !!!!

உலகம் முழுவதும் சத்யம் பங்குகள் விலை சரிந்த பொழுது தங்களது பணம், சொத்து , ஏன் வாழ்க்கையே தொலைத்தவர்கள் பல பேர்?

அப்படி
என்னதான் நடந்தது? -------------

சத்யம் தொடக்கம்:

சத்யம் நிறுவனம் ராமலிங்க ராஜுவால் ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு 1991 - ல் தொடங்கப்பட்டது. அவரது தம்பி ராமராசு CEO - ஆக செயல்பட்டார். நிறுவனம் நன்கு செயல்பட ஆரம்பித்தது. அதன் வளர்ச்சியை கண்ட ஆந்திர அரசு 1996 - 1997 ஆண்டுகளில் சத்யம் நிறுவனத்திற்கு பல சலுகைகள் வழங்கியது . தகவல் தொழில் நுட்ப துறையில் தமது மண்ணின் மைந்தராக ராமலிங்க ராஜுவிற்கு அதிகபடியான சலுகைகள் வழங்கியது. இதை அடுத்து 1998 - ல் முறையாக IPO அனுமதி பெற்று பங்கு சந்தையில் நிறுவன பங்குகள் வர்த்தகம் தொடங்கின.

அடுத்த 2001 - 2002 வருடங்களில் பலர் ஆச்சரியப்படும் விதத்தில் தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் கணக்கில்லாமல் அதிகரித்து வந்தது. பின்னர் 2002 - 2008 இத்துறையில் சிற்சில பிரச்சினைகள், புதிய வியாபார ஒப்பந்தங்கள் வந்தது .

இந்த காலங்களில் தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனங்களின் வரிசையில் நான்காம் இடத்தை பிடித்தது . மேலும் தமது நிறுவனத்தின் வளர்ச்சியை வைத்து நமது நாடு மட்டும் அல்லாமல் 17 - 24 நாடுகளில் வணிகம் செய்வதாக தகவல்கள் உள்ளன. இதை கண்ட அந்நிய முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதியகங்கள், சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நபர்கள் நிறுவனத்தில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் பங்குதாரர்களாக.


சத்யம் ராமலிங்க ராஜுவிற்கு இரண்டு மகன்கள் . அவர்கள் மேதாஸ் இன்பிரா என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தனர் . சத்யத்தின் செல்வாக்கை பயன்படுத்தி ஆந்திராவில் கட்டுமான பணிகள் செய்து வந்தனர் . நிறுவனம் வளர்ச்சி அடைய பெரிதும் சத்யத்தின் ஆதரவு கிடைத்தது . இந்நிலையில் 2007 இறுதியில் IPO வெளியிட்டது.

இவர் சென்ற வருடத்தின் இறுதியில் நடந்த சத்யம் நிருவர்கள் கூட்டத்தில் ராஜு , நிறுவன அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களிடம் கட்டுமான பணியில் ஈடுபடலாம் . அதற்காக மெய்டஸ் இன்பிரா நிறுவனத்தை வாங்கலாம் என்று கூறி உள்ளார் .

அதற்கு அவர்கள் நமது நிறுவனம் நன்றாக நடந்து வருகிறது . இந்நிலையில் புதிதாக இன்பிரா தொழில் தேவை இல்லை . மேலும் அந்நிறுவன பங்கின் விலைகள் 600 - க்கும் அதிகமாக உள்ளது. அதனால் வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ராஜு அந்நிறுவனத்தை வாங்கியே தீருவது என கூட்டத்தில் கூறிவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தில் இது பற்றிய பேச்சு எழுந்தது. அதன் பின்னர் முக்கிய முதன்மை அதிகாரிகள் பதவி விலக ஆரம்பித்தனர் . இதன் பின்னர் சத்யம் நிறுவனத்தை பற்றிய சில உண்மை தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன . வெளிநாட்டு முக்கிய முதலீட்டாளர்கள் , உள்நாட்டு பங்குதாரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளிவர ஆரம்பித்தனர் .

இந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென ராஜு நிறுவனர் பதவியில் இருந்து தாம் விலகி விடுவதாகவும் மேலும் நிறுவனத்தின் இருப்பு தொகையில் கையாடல் செய்து விட்டதாகவும் கூறி நிறுவனத்தில் இருந்து விலகினர் .

இந்த தகவல் வெளியானதும் சந்தையில் சத்யம் பங்குகள் 260 விலையில் இருந்து 30 ரூபாய் வரை சரிவடைந்தன.


அதன் பின்னர்தான் சத்யத்தின் உண்மைகள் முழுவதும் அம்பலம் ஆனது.

* ராம லிங்க ராஜு நடந்து கொண்ட விதத்தை வைத்து பார்க்கும் பொழுது மெய்டஸ் நிறுவனத்தை வாங்கி இருந்தால் எடுத்த எல்லா தொகையும் சரி செய்து இருப்பார் போல தெரிகிறது.

* மெய்டஸ் இன்பிரா சத்யத்தின் துணை நிறுவனம்போல் செயல்பட்டு வங்கியில் கடன் பெற்றதும், சில ஒப்பந்தங்கள் பெற்றதும் தெரிய வந்துள்ளது.

* ராஜு சத்யம் பங்குகளில் பெருமளவில் uyarndha விலையில் விற்றுள்ளார்.


* மேலும் சில டீமாட் கணக்குகள் தமக்கு தெரிந்தவர்கள் பெயரில் வைத்து பங்குகள் தினசரி வணிகம் செய்யப்பட்டுள்ளன.


* ராஜு தனது promotor பங்குகளின் விகிதங்களை ஒவ்வொரு வருடமும் குறைத்து கொண்டு வந்துள்ளார் . இறுதியாக அவர் இடம் இருந்த promotor பங்குகள் 17.80 % மட்டுமே . அவையும் வங்கிகளில் அடமானம் வைக்கபட்டிருந்தன.


* மெய்டாஸ் நிறுவனத்தின் பங்குகளும் பெருமளவில் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு இருந்தன.


* சத்யத்தில் நடந்த பிரச்சினைக்கு பின்னர் அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை வங்கிகள் விற்பனை செய்துள்ளன .அதன் பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதியகங்கள் அனைத்தும் பங்குகளை விற்றன. அதனால் விலை கட்டுக்கடங்காமல் சரிந்தன.


இவை எல்லாம் நடந்து முடிந்த பின்னர் நிறுவனத்தின் பிற அதிகாரிகள் நிறுவனத்தை பற்றி பேச அவர்களும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர் . இந்நிலையில் இப்பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வர மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதி உதவியை அளிப்பதாக கூறியது.

மீதம் இருந்த அதிகாரிகளும் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் சில அதிகாரிகளின் மாயம் ஆகியவற்றால் அரசு அளிக்க இருந்த நிதி உதவியை ரத்து செய்தது . மேலும் சத்யத்தை நிர்வகிக்க , சத்யத்தை சீர்படுத்த ஒரு குழுவை அமைத்தது . அவர்கள் பிரச்சினையை சரி செய்தார்களோ இல்லையோ உடன் சத்யத்தை வாங்க பல பெரிய நிறுவனங்கள் களத்தில் குதித்தன.

ஆனாலும் நிறுவனத்தின் இருப்பு மற்றும் கணக்கு விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை மற்றும் வெளிவரவும் இல்லை. இந்நிலையில் நடந்த டெண்டர் முறையில் சத்யம் நிறுவனத்தை மகிந்த்ரா நிறுவனர் ஆனந்த் மகிந்திரா வாங்கியுள்ளார் . மேலும் சத்யம் நிருவனத்தின் மீது அமெரிக்காவில் சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளது .அதுமுடிவிற்கு வந்தால் சுமார் 2900 கோடி வரை செலவாகும் என கணக்கிட பட்டுள்ளது.

தற்சமயம் சத்யத்தின் சந்தை மதிப்பு 5668 crores ஆகும் . நிறுவனத்தின் 5 1 % பங்குகளை ஆனந்த் மகிந்திரா vaanki உள்ளார்.


வரும் காலங்களில் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பிரச்சினைகள் எப்படி இருக்கும் என தெரியாது . புதிய நிர்வாகத்தினரின் பொறுப்பில் சத்யம் ? ? ? ?

இவை அனைத்தும் உங்கள் தகவலுக்காக மட்டுமே...

நன்றி ..!!!!!

புதன், 15 ஏப்ரல், 2009

வணக்கம் நண்பர்களே ,,,,
நேற்று முந்தினத்தின் உயர்வுகளுக்கு பரிகாரமாக சற்று சரிவில் துவங்கி இருக்கும் ஆசிய சந்தைகள் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல நமது மற்றும் உலக சந்தைகள் பலவும் ஒரே குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையே வர்த்தகம் நடை பெற்று வருகிறது

நமது சந்தைகளில் பெரிது எதிர் பர்ப்புக்குள்ளன இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை இன்று வெளியாகிறது .. இதன் அறிவிப்புக்கு பின்னர் தான் சந்தைகளின் போக்கினை உறுதி படுத்தலாம் .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் 1.5 % to 2 % வரை சரிவில் முடிந்த்துள்ளன . நமது சந்தைகள் " FLAT " நிலைகளில் துவங்கலாம் .. இன்போசிஸ் அறிவிப்புக்கு பின்னர் சந்தைகள் சரியலாம் ..

நிப்டி நிலைகள் இன்று துவக்கமும் மற்றும் முடிவும் பழைய நிலைகளையே தொடரும் !!!!

நன்றி !!!

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட நிலைகளுக்குள் வர்த்தகம் நடந்தன . ஆனால் சந்தைகள் இடையில் திடீரென நாளின் உயரங்களை கடந்து மேலே கொண்டு செல்லப்பட்டதற்க்கான காரணம் தான் தெரிய வில்லை .. ஆனால் செயற்கையாக உயர்த்தி செல்லப்பட்டது மட்டும் தெரிந்தது .

பின்னர் சந்தைகள் முடிவில் வேகமாக சரிவடைந்து முந்தைய முடிவு புள்ளிகளை விட + 35 புள்ளிகள் அதிகரித்து 3390 புள்ளிகளில் நிலை பெற்றன . இதில் குறிப்பிடும் படியான விஷயம் என்னவென்றால் நாளின் உயரத்திற்கு ( 3432 ) சென்ற சந்தைகள் அங்கிருந்து 60 புள்ளிகள் இறங்கி 3374 வரை இறங்கி வந்தன . இதன் அளவு கிட்டத்தட்ட 2 % ஆகும் ..

முந்தய பதிவில் குறிப்பிட்டது போல் நாளை வெளியாக இருக்கும் இன்போசிஸ் காலாண்டு முடிவிற்கு பிறகு தான் சந்தையின் தெளிவான போக்கினை காண இயலும் என நினைக்கிறேன் . மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் நிறுவனத்தின் நிகர லாபம் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர்கள் கணிக்கின்றனர் .

நேற்று ஆசியா சந்தைகள் மற்றும் உலக சந்தைகள் இல்லாமல் நமது சந்தைகளில் இத்தகைய உயர்வு தேவையற்றது என கருதுகிறேன் .

நேற்று அமெரிக்கா சந்தைகள் " FLAT " நிலைகளில் தங்களது வர்த்தகத்தினை முடித்து கொண்டன . மேலும் அங்கு நாளை மற்றும் நாளை மறுதினம் வரவுள்ள காலாண்டு அறிக்கைக்கு பிறகு தான் அமெரிக்கா சந்தைகளின் போக்கு உறுதி செய்யப்படும் .

நமது சந்தைகள் இன்று விடுமுறை .. நமது சந்தைகளை பொறுத்த வரையில் சரிவுகளுக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன் .

நன்றி !!!

பொய் என்பது ஒற்றை காலில் நிற்பது @@
மெய் என்பது இரட்டை காலில் நிற்பது .....

திங்கள், 13 ஏப்ரல், 2009

உலக சந்தைகள் பலவும் இன்றைய தினம் விடுமுறை என்கின்றன நிலையில் எஞ்சியுள்ள ஜப்பானிய மற்றும் கொரிய சந்தைகள் பிளாட்நிலைகளில் தங்களது வர்த்தகத்தினை தொடங்கி உள்ளன . நமது சந்தைகளில் பெரிதும் எதிர் பார்ப்பில் உள்ள இன்போசிஸ் காலாண்டு அறிக்கைக்கு பிறகு தான் நமது சந்தைகளின் போக்கினை கணிக்க இயலும் என நினைக்கிறேன் .

ஆகநமது சந்தைகளின் இன்றைய போக்கு சற்று குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையில் மட்டும் வர்த்தகம் நடக்கலாம் அது மிகவும் மெதுவான நகர்வுகளாக இருக்கலாம் . இன்றைக்கு சத்யம் நிறுவனத்தின் ஏலம் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது .

இன்றைய
அமெரிக்கசந்தைகளின் போக்கும் சற்று மந்தமாகவே இருக்கலாம் . நாளை மறுதினம் வரவுள்ளன காலாண்டு அறிக்கைகள் போக்கை வைத்து அமெரிக்க சந்தைகள் தங்களது நிலையினை உறுதி செய்யும் என கருதுகிறேன் ..

*********** நமது சந்தைகள் நாளை விடுமுறை *******************

முடிந்தவரை தங்களது லாங் நிலைகளில் இருந்து வெளி வருதல் நலம் அல்லது புட் ஆப்சன் இல் தங்களது பொசிசன் ஹெட்ஜ் செய்யுங்கள் ..

நிப்டி நிலைகள் ------

அதரவு ----- 3333 , 3301 , 3275 ....
எதிர்ப்பு ----- 3380 , 3400 , 3410 ...

நன்றி !!!
*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&&*&&*&&*&*&*&*&*&**&*

முடிந்த வரை ஆசைப்படுங்கள் ! ஆசையை நீங்கள் ஆளுங்கள் !!!
ஆனால் ஆசை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள் !

சனி, 11 ஏப்ரல், 2009

நேற்று ஆசிய சந்தைகள் சிலவற்றில் விடுமுறை ஆனால் ஜப்பானிய மற்றும் கொரிய சந்தைகள் வழக்கம் போல வர்த்தகத்தை தொடங்கின ..ஆனால் நேற்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா சந்தைகள் விடுமுறை மற்றும் நமது சந்தைகளும் இல்லை ஆகவே இவ்விரு சந்தைகளும் தங்கள் நிலைகளில் அப்படியே வர்த்தகம் ஆகி 1 % வரை அதிகரித்து முடிந்தன .

வரும் நாட்களில் உலக சந்தைகள் பலவற்றில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . நமது சந்தைகள் செவ்வாய் விடுமுறை .. மற்றும் தேர்தல் ஏப்ரல் 16 இல் தொடக்கம் . இன்போசிஸ் காலாண்டு அறிக்கை ஏப்ரல் 15 வெளிவருகிறது .

மேலும் இந்த வார இறுதியில் உலக சந்தைகள் பலவும் புதிய உயரங்களில் முடிவடைந்த்துள்ளன . வரும் நாட்களில் சந்தைகளின் போக்கினை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் ...

நன்றி !!!

உங்களின் இனிய இயல்பே உங்கள் உள்ளத்திற்கு அழகு ஆகும் ..

சிறப்பு தகவல் இடுகை !!!!!!

இந்த வாரத்தில் சில முக்கிய பங்குகளின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளன. அவைகளை வரிசைப்படுத்தி உள்ளேன் ..

..இது தங்களின் தகவலுக்காக -----------

*******************************************
பங்கின் பெயர் ---- உயர்வு %
*****************************
டாட்டா ஸ்டீல் - 17 %
யுனிடெக் - 11%
ரிலை கேப் - 13 %
எல் அண்ட் டி - 16%
ரிலை இன்ப்ரா - 13 .5 %
டி எல் எப் - 10 %
மிர்க் எலெக் - 41 %
ஹச் சி எல் - 14 %
ரிலை இந்துஸ் & இன்ப்ரா - 65 %

**************************************
நன்றி !!!

கடந்த வார சந்தைகள் !!

INDICES == WKLY CLS = CHANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 8964.11 = + 214.21 .

FTSE = 3983.71 = - 45.82.

DOW JONES = 8083.38 = + 66.38 .

NASDAQ = 1652.54 = + 39.97 .

HANG SENG = 14901.41 = + 355.72 .

KOSPI = 1336.04 = + 52.29 .

NIFTY = 3342.05 = + 131.05 .

SENSEX = 10803.83 = + 455.34. .

SGX NIFTY = 3408.50 = + 132.

*********** ************* ****************

வெள்ளி, 10 ஏப்ரல், 2009


நேற்றைய
சந்தைகள் உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி 2 % உயர்வில் துவங்கின . ஆசிய சந்தைகள் 2 % வரை உயர்வில் துவங்கின . ஆசிய மற்றும் இதர சந்தைகள் நேற்று முன்தினம் 3 % to 4 % வரை சரிவில் முடிந்தன .


அதனால் உயர்வில் துவங்கின . ஆனால் நமது சந்தைகள் நேற்று முன்தினம் வர்த்தகம் முடிவில் 3 % வரை உயர்வில் முடிந்தது குறிப்பிடத்தக்கது . மற்றும் நமது சந்தைகளின் உயரங்களை உலக சந்தைகள் எதுவும் இன்னும் எட்டவில்லை என்பது நினைவில் வைக்கவும் ..

நேற்று நமது சந்தைகள் வந்த உயர்வு சற்று ஆச்சர்யம் தான் .. ஏன் எனில் இன்பிலேசன் 0.26 vs 0.31 என அறிவிப்பு வந்தது . ஆனால் அதற்க்கு முன் வர வேண்டிய ஐ ஐ பி அறிவிப்பு சற்று தாமதம் ஆனது ..

கடந்த சில மாதங்களாக ஐ ஐ பி அறிவிப்பு சந்தைக்கு அதரவாக இருப்பின் 11 .30 மணிக்கெல்லாம் சரியாக வரும் .. ஆனால் ஐ ஐ பி அறிவிப்பு சற்று தாமதமாக வந்தால் மோசமாக இருக்கும் . இதனால் சந்தைக்கு பாதிப்பு என புரிந்து கொள்ளும் படி இருந்தது .

நேற்றும் அதே போல சற்று தாமதம் ஆனது . ஆனால் ஐ ஐ பி - 1.2 என வந்தது . இது சந்தைக்கு மிகவும் பாதகம் தான் . ஆனால் அறிவிப்பு வந்தது வந்ததும் சந்தைகள் நாளின் உயரங்களுக்கு அருகில் செல்ல ஆரம்பித்து சில புள்ளிகளுக்கு முன் வரை சென்று பின்னர் கீழிறங்கின ..

நாளின் வர்த்தகத்தின் இடையில் சந்தைகளின் போக்கு சற்று அதிகப்படியாக அதிக உயர்வு மற்றும் அதிக சரிவு என வர்த்தகம் ஆனது இதை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் முழுவதும் இன்னும் ஆபரேடர் கைகளில் சந்தைகள் உள்ளதாக கருதுகிறேன் .

மற்றும் நமது சந்தைகள் ௨00 வர்த்தக தினங்களின் சராசரி விலைகளை( 3400 ) நேற்று தொட்டன . ஆனால் சந்தைகள் தொடர்ச்சியாக அந்த நிலைகளில் நிற்க முடிய வில்லை ஆதலால் சந்தைகள் கீழிறங்க ஆரம்பித்தன .,

மேலும் அந்த நிலைகளுக்கு மேல் சந்தைகள் செல்ல இயலவில்லை அந்த நிலைகளில் " short selling " அதிகமாக உள்ளது .. ஆகையால் வரும் நாட்களில் சந்தைகளில் சரிவுகள் வரலாம் . நமது சந்தைகள் முடிவில் ஆசிய சந்தைகள் 3 % to 4 % வரை அதிகரித்து முடிந்தன . நமது சந்தைகள் நேற்று முன் தினம் முடிந்த அதே நிலைகளில் " 3355 " முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் வர்த்தக அறிவிப்பு மற்றும் வேலை இல்லாதோர் பற்றிய அறிவிப்புகள் மந்தமாக வந்த போதிலும் சந்தைகள் உயர்வினை கண்டன . அமெரிக்கா சந்தைகள் முடிவில் 3 % to 4 % வரை உயர்ந்தன .


------------- இன்று நமது சந்தைகள் விடுமுறை ----------------------
*******************************************************************************

இன்றைய ஆசிய சந்தைகள் 0.5 % to 1 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . வார இறுதி மற்றும் அனைத்து சந்தைகளின் உயரங்கள் எல்லாம் சேர்ந்து உலக சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்யும் நிலைகள் வரலாம் . வரும் வாரங்களில் உலக சந்தைகளில் சில சரிவுகள் வரலாம் .

நன்றி !!!


ஒருவன் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கம் மட்டுமே !

வியாழன், 9 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தைகள் துவக்கம் சரியாக ஆசிய சந்தைகளின் போக்கினை ஒட்டி இருந்தது . துவக்கத்தின் போது 3 % சரிவில் துவங்கின . ஆனால் தொடர்ச்சியாக ஆசிய சந்தைகள் சரிவில் சென்று கொண்டு இருந்தன . ஆனால் நமது சந்தைகள் மாறாக நாளின் உயரங்களை கடக்க ஆரம்பித்தன .பின்னர் முழுவதுமாக மேலேறி சரிவில் இருந்து முழுமையாக மீண்டது .

ஆனால் தொடர்ச்சியாக சந்தைகள் மேலே வந்து நாளின் உயரங்களை திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் உடைத்து மேலே சென்றது . சந்தைகளின் இடைவேளையின் போது ஆசிய சந்தைகள் நாளின் குறைந்த பட்ச புள்ளிகளுக்கு ( 3 % to 3.5 % சரிவில் )அருகில் வர்த்தகத்தை முடித்துக்கொண்டன . ஆனால் நமது சந்தைகள் 3 % அதிகரித்து முடிந்தன .

நமது சந்தைகள் நேற்று வர்த்தகத்தின் போது ( எனது மற்றும் அனைத்து டெக்னிகள் ) கணக்குபடி நாளின் குறைந்த பட்ச நிலைகளில் இருந்து கிட்ட தட்ட " 7 " எதிர் நிலைகளை கடந்தது குறிப்பிட தகுந்த விசயமாகும் . ( நிலைகள் .. 3170 , 3200 , 3240 , 3275 , 3301 , 3342 , 3350 .) .
இவை அனைத்தும் எந்த வித நல்ல செய்திகள் இல்லாமல் ஒரே நாளில் சந்தைகள் கடந்து வந்தது ஆச்சர்யமே !!! இவை அனைத்து ஆபரேட்டர்களின் சூட்சமம் தான் ..

நமது சந்தைகள் நேற்றைய முடிவில் " 120 " புள்ளிகள் அதிகரித்து " 3355 " என்ற புள்ளிகளில் நிலை கொண்டன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சரிவில் துவங்கி சந்தைகள் முடியும் போது " FLAT " மற்றும் 1 % அளவில் உயர்வினை கண்டன . ஆனால் இதற்க்கு இடையில் அமெரிக்காவின் வணிகம் சம்பந்தமான அறிவிப்பு மோசமாக வந்தது ஆனாலும் சந்தைகள் மேல் நோக்கியே முடிவடைந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றைய சரிவின் சிறு எழுச்சியாக 1.5 % to 2 % வரை உயர்வில் துவங்கி உள்ளன .

இன்று வரவுள்ள நமது இன்பிலேசன் மற்றும் ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைகளின் அடுத்த கட்ட நகர்வினை உறுதி செய்யும் என நினைக்கிறேன் ..

நிப்டி நிலைகள் ------

அதரவு ----- 3333 , 3301 , 3275 ....
எதிர்ப்பு ----- 3380 , 3400 , 3410 ...

நன்றி !!!

மனிதனுடைய வலிமையை குறைக்கும் மூன்று @@@
* அச்சம் - கவலை - நோய் *