புதன், 17 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளில் துவக்கம் சற்று வித்யாசமாகவே இருந்தது . சிங்கபூர் நிப்டி 109 புள்ளிகள் சரிவு ஆனால் நமது சந்தைகளோ துவக்கம் 60 புள்ளிகள் மட்டும் சரிவு .உயர்வுகளில் சிங்கபூர் நிப்டி ஐ கடை பிடிக்கும் நமது சந்தைகள் சரிவில் மட்டும் குறைவான சரிவுகளை காட்டுகிறது .

ஆனால் துவக்கம் முதலே நமது சந்தைகளில் சற்று மீட்சி தெரிந்தது . ஆசிய சந்தைகள் துவக்கத்தில் ஏற்ப்பட்ட சரிவினை திரும்ப மீள முடியாமல் மேலும் சரிந்தன .என்பது குறிப்பிட தக்கது .

நமது சந்தைகள் மதியம் முடிந்த வரை பங்குகளையும் மற்றும் இன்டெக்ஸ் ஐ யும் மேலே உயர்வுகளில் நிறுத்தி வைத்தனர் நமது ஆபரேட்டர்கள் . ஆசிய சந்தைகள் மேலும் மேலும் சரிந்தன .முடிவில் ஆசிய சந்தைகள் 2 1/2 % வரை சரிந்து முடிந்தன .

நமது சந்தைகள் நேற்று பங்குகள் மற்றும் இன்டெக்ஸ் அனைத்தும் ஏமாற்றப்பட்டு உயர்த்தப்பட்டதாக கருதுகிறேன் . சரிவில் வர்த்தகம் ஆனது பின்னர் வர்த்தகத்தில் வேக வேக மாக உயர்த்தப்பட்டது . இந்த உயர்விற்கு எந்த வித செய்திகளோ அல்லது ஊக்க அறிவிப்புகளோ சந்தைகளில் இல்லை என்பது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே சரிவில் வர்த்தகம் ஆனது . சந்தைகளில் முந்தய சரிவின் எழுச்சியாக ஒரு உயர்வு எதிர் பார்க்கப்பட்டது ஆனால் அங்கு வந்த பொருளாதார அறிவிப்பின் சரிவால் சந்தைகளிலும் சரிவுகள் அதிகரித்தது ஆதலால் சந்தைகளில் சரிவுகள் அதிகரித்து முடிவில் 1 1/2 % வரை சரிவடைந்து முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் குழப்பமான சூழலில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . 1 % - 1 1/2 % வரை சரிவில் துவங்கி உள்ளன .நமது சந்தைகளும் ஆசிய சந்தைகளின் போக்கினையே தொடர வாய்ப்புகள் உள்ளன .

நிப்டி நிலைகள் ---

அதரவு ---- 4520 ,4480 ,4450 .
எதிர்ப்பு ---- 4550 ,4591 , 4620 .

நன்றி !!!

செவ்வாய், 16 ஜூன், 2009

நேற்றைய சந்தையில் எதிர் பார்த்தபடி நிப்டி 40 புள்ளிகள் சரிவில் துவங்கின . பின்னர் ஆசிய சந்தைகளில் வந்த செல்லிங் காரணமாக நமது சந்தைகளும் சரியத்தொடங்கின . ஆசிய சந்தைகள் அனைத்தும் 2 % வரை சரிவில் வர்தகமாகி முடிந்தன .

நமது சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான 4520 முக்கிய எதிர்நிலையான 4591 ஆகிய இரண்டு நிலைகளையும் கடந்து வர்த்தகம் ஆனது குறிப்பிட தக்கது . மேலும் நேற்றைய சந்தையில் செல்லிங் அதிகரித்ததற்கான காரணம் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நாச்சுரல் விவகாரம் முடிவுக்கு வந்தது .

உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் மிகவும் அதிகம் என்று கணிக்கப்பட்டது . ஆதலால் சந்தைகளில் ரிலையன்ஸ் பங்குகள் சரியத் தொடங்கின . அந்த சரிவுகள் கிட்ட தட்ட 7 % வரை சென்றன . ஆனால் ரிலையன்ஸ் நேச்சுரல் நிறுவனத்திற்கு லாபம் அதிகம் என்று கணிப்பில் தெரிகிறது .

மேற்கண்ட செய்திகளால் சந்தைகளில் சரிவுகள் அதிகரித்தது . சந்தைகள் 4520 நிலைகள் உடை பட்டதும் " 4481 " வரை சந்தைகள் சென்றன பின்னர் முடிவில் சந்தைகள் 100 புள்ளிகள் சரிவடைந்து 4486 புள்ளிகளில் முடிவடைந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பியுச்சர் சந்தைகள் காலை முதலே 1 % வரை சரிவில் வர்த்தகம் நடந்து கொண்டு இருந்தது . நேற்று மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 1 1/2 % வரை சரிவில் துவங்கின

அமெரிக்கா சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்தல் மற்றும் பிரெஷ் செல்லிங் ஆகியவற்றின் காரணமாக சந்தைகள் அதிக சரிவினை கண்டுள்ளதாக கருதுகிறேன் . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 2 1/2 % - 3 % வரை சரிவில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகளும் அதிக சரிவுகளில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 3 % - 4% வரை சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் 2 % வரை சரிவில் துவங்கி உள்ளன . இது உலக சந்தைகளின் போக்கினை கடை பிடிப்பதாக கருதுகிறேன் . மேலும் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல உலக சந்தைகளில் இந்த மற்றும் வரும் வாரங்களில் சரிவுகள் அதிகமாக இருக்கலாம் . சந்தைகளுக்கு ஆதரவான ஊக்க செய்திகள் எதுவும் இல்லை என்கின்றன நிலை .

நமது சந்தைகள் ஆசிய சந்தைகளின் போக்கினையே தொடரும் துவக்கம் 1 1/2 % - 2 % வரை சரிவில் துவங்கலாம் . மேலும் சந்தைகள் மீட்சிக்கு உலக சந்தைகளின் போக்கினை பின்பற்றும் . மற்றும் மதியம் துவங்கும் ஐரோப்பிய சந்தைகள் போக்கு நமது சந்தைகளில் பிரதி பலிக்காது என்றே கருதுகிறேன் .

முடிந்த வரை பங்குகளின் உயர்வில் பங்குகளை விற்று லாபம் பாருங்கள் . அது சிறிய உயர்வாக இருந்தாலும் வெளியேறுங்கள் . அவரேஜ் செய்ய இது சரியான தருணம் அல்ல .

நமது சந்தைகள் இன்று 4520 நிலைகளுக்கு மேல் செல்ல வாய்ப்புகள் இல்லை . 4470 நிலைகள் உடைபட்டால் சந்தைகள் பலவீனமடைவது உறுதி செய்யப்படும் என நினைக்கிறேன் . இறுதி ஆதரவு நிலையான 4450 நிலைகள் மட்டும் எஞ்சியுள்ள இறுதி நிலையாக இருக்கும் அந்த நிலைகள் உடைபட்டால் சந்தைகளில் சரிவில் வேகம் அதிகரிக்கும் .

கவனமாக இருங்கள் !!!

நன்றி !!!

திங்கள், 15 ஜூன், 2009

வெள்ளியன்றைய பதிவினை படித்து தொடரவும் ........

வெள்ளியன்றைய அமெரிக்க சந்தைகள் பெரியதாக நகர்வுகள் எதுவும் இல்லாமல் வர்த்தகத்தினை முடித்து கொண்டன .

இன்றைய ஆசியசந்தைகள் துவக்கம் 1% வரை சரிவில் துவம்ங்கி உள்ளன . ஆசிய சந்தைகளில் இன்றும் மற்றும் வரும் வாரங்களில் செல்லிங் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன . மேலும் இந்த வாரம் வர இருக்கும் உலக நாடுகளின் இன்பிலேசன் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எல்லா நாடுகளிடையேயும் கணிப்பில் உள்ளது .

நமது சந்தைகள் இன்று துவக்கம் ஆசிய சந்தைகளை ஒட்டி சரிவில் துவங்கவே வாய்ப்புகள் உள்ளன . மேலும் நமது சந்தைகள் இன்றைய சந்தையில் 4520 ,4500 நிலைகள் உடைபட்டால் சந்தைகளில் செல்லிங் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன .

அவ்வாறு வரும் செல்லிங் காரணமாக சந்தைகள் எஞ்சியுள்ள ஒரே அதரவு நிலையான 4470 , 4450 நிலைகளை தொட்டாலும் ஆச்சர்யமில்லை .

அவ்வாறு நிகழ்ந்து சந்தைகள் 4450 நிலைகளுக்கு கீழே முடிவடையும் பட்சத்தில் சந்தையின் பலவீனம் உறுதி செய்யப்படும் மற்றும் அவ்வாறு முடிவடைந்தால் சந்தைகள் மேலும் சரிவடையும் .

தினசரி வர்த்தகர்கள் சந்தையில் ஷார்ட் செல்லிங் செல்லலாம் . நிப்டி சந்தைகள் துவங்கி பின்னர் ஒரு உயர்வில் 4550 - 4560 நிலைகளில் செல்லிங் செய்யலாம் ஸ்டாப் லாஸ் 4592 .........

நிப்டி நிலைகள் ---
அதரவு -- 4520 ,4500 ,4478 .
எதிர்ப்பு -- 4591 , 4620 , 4650 .

நன்றி !!!

ஞாயிறு, 14 ஜூன், 2009

good bye @ மிட் கேப்ஸ் .....

வணக்கம் !!!

ஒரு விழிப்புணர்வு பதிவு !!!!!!!! முதலீட்டளர்களுக்கு மட்டும் @

வணக்கம் அன்பு முதலீட்டாளர்களே !

தற்போதைய சந்தைகளில் தங்களுக்கு விற்கலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் சந்தைகள் தினம் உயர்த்தப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான் .ஆனால் சந்தைகள் இது போல தான் உயர்ந்து கொண்டே செல்லும் என சென்செக்ஸ் இன் அதிக பட்ச விலைகளில் நடந்தது நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம் .

சரி விசயத்துக்கு வருவோம் ,,,,,,,,

நமந்து சந்தைகள் வரலார்ருகானாத அளவு உயர்ந்து வருகிறது . சந்தைகளில் இந்த திடீர் உயர்வுகளில் உயர்ந்த மிட் கேப் பங்குகள் சரிவில் என்னவாகும் .

தற்சமயம் திடீர் என உயர்த்தப்பட்டு வரும் பங்குகள் அடிக்கடி வாங்குபவர் மட்டும் இருக்கும் நிலைகள் இதே போல சந்தைகள் சரிவடையும் பொழுது செல்லர் மட்டும் இருக்கும் படியான வர்த்தகம் தான் நடைபெறும் .

அவ்வாறு நடந்தால் தங்கள் பங்குகளை விற்க சில மாதங்கள் கூட ஆகலாம். அது வரை செல்லர் பிரீஸ் ஆகி கொண்டு இருந்தால் பங்குகளின் விலைகள் பெரிய சரிவுகளை காண நேரிடும் .

ஆகவே நண்பர்களே அது போல பங்குகளை இனம் கண்டு உயர்வில் வெளியேறுங்கள். மேலும் உங்கள் முதலீடு சரிவில் மட்டும் இருக்கட்டும் .

நன்றி !!!

@ கடந்த வார சந்தைகள் @

கடந்த வார சந்தைகள் !!
INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 10135 = +367.81 .
FTSE = 4441.95 = +3.62 .
DAX = 5069.24 = +8.
CAC = 3326.14 = +13.35 .
STRAITES = 2377.07 = -19.
DOW JONES = 8799.26 = +36 .
NASDAQ = 1858.80 = +9.09 .
HANG SENG = 18889.68= +210 .
KOSPI = 1428.59=+ 30 .
NIFTY = 4583.40 =-3 .
SENSEX = 15237 = +134 .
SGX NIFTY = 4585 = -2 .

*********************************************************