அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மே, 2009

நேற்றைய உலக சந்தைகள் முழுவதும் அமெரிக்காவின் " strees " பற்றிய அறிவிப்பிற்க்காக உலக சந்தைகள் பலவும் சரிவுகள் இல்லாமல் உறுதியாக மேல் நிலைகளில் வர்த்தகம் ஆனது . ஆசியசந்தைகள் துவக்கம் சற்று அதிகமாக இருந்தது இருந்தாலும் சந்தைகள் முடியும் வரை சரிவுகள் இல்லை

ஆதலால் நமது சந்தைகள் முடிந்த வரை மேலே கொண்டு செல்லப்பட்டது . நமது சந்தைகள் இன்றைய சூழலில் நுட்ப காரணிகளை தொடர்பு படுத்தாமல் சந்தைகள் வர்தகமாகி வருகிறது .

மேலும் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தைகளில் இன்னும் வாங்கும் படலத்திலேயே உள்ளனர் என்று அவர்கள் கணக்கு சொல்கிறது ( ஆனால் அவர்கள் வாங்குவது சில சூட்சமம் தான் சில பங்குகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது ) . அவர்கள் வெளியேறும் வரை நமது சந்தைகளின் போக்கு நமக்கு புரியாது ...

நேற்றைய சந்தைகளில் நமது சந்தைகள் 3610 முக்கிய அதரவு நிலையாக கொண்டு துவங்கியது .. சந்தைகள் எதிர் ' 3670 சென்றது குறிப்பிடத்தக்கது



சனி, 18 ஏப்ரல், 2009

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் !!!

பங்கு சந்தை பற்றிய சில விபரங்கள் மற்றும் சந்தையின் சிறப்பம்சங்களை எனது பதிவுகளில் தெரிந்து கொண்டீர்களா ?

நண்பர்களே !!!!!
இன்றைய சந்தை நிலைமைகளை வைத்து அந்நிய முதலீட்டாளர்களை பற்றி ஒரு பதிவு எழுதலாம் என தோன்றியது உடன் உங்கள் முன் பார்வைக்கு ...

நமது சந்தைகளில் ( நான் பங்கு சந்தை ஒரு அலசலில் கூறியது போல ) சிறு முதலீட்டாளர்கள் , நீண்ட கால முதலீட்டாளர்கள் , தினசரி வணிகர்கள் அந்த வரிசையில் DII'S - " DOMESTIC INSTITUTIONAL INVESTOR , HNI 'S - HIGH NETWORTH INDIVIDUAL INVESTOR , QNI 'S - QUALIFIED NETWORTH INDIVIDUAL INVESTOR -- இவர்களுக்கு அடுத்த படியாக வருபவர்கள் தான் - FII 'S - FOREIGN INSTITUTIONAL INVESTOR ... என்கிற இந்த அந்நிய முதலீட்டாளர்கள் ...

சரி அந்நிய முதலீட்டாளர்கள் என்றால் யார் ? எப்படி நமது சந்தைக்கு வருகின்றனர் ? ஏன் வருகின்றனர் ? ...

அந்நிய முதலீட்டாளர்கள் என்பவர் வெளி நாடுகளில் இருந்து உலக சந்தைகளில் வர்த்தகம் செய்யவரும் ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு பரஸ்பர நிதியகங்கலாகவோ இருக்கலாம் . இவர்களின் குறிக்கோள் லாபம் பர்ப்ப்பது மட்டும் தான் . பின்னர் சந்தைகளில் ஒரு அபரீத வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை ஏற்ப்படுத்தி லாபம் பர்ப்ப்பர்கள் அது தான் அவர்களின் வேலை ..

இவர்கள் பங்கு சந்தைகளை நெறிமுறை படுத்தும் அமைப்பான செபி இன் அனுமதி பெற்று பின்னர் கணக்குகள் துவங்கி சந்தைகளில் குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்யலாம் என செபி ஆணை வழங்கிய பிறகு அவர்கள் வர்த்தகத்தினை தொடங்கலாம் .

இவர்களுக்கென அரசு பல சட்டதிட்டங்களை வகுத்து அதை நெறிமுறை படுத்தி "p " " notes " என்று பெயரிட்டுள்ளது . இந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ள படி தான் அந்நிய முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் மீறினால் செபி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் .

இந்த " p " "notes " இல் அவர்களுக்கு தரப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் சில விபரங்கள் , வியாபார ஒப்பந்தங்கள் , வியாபார முறைகள் மற்றும் தினசரி வணிகத்தின் அளவுகள் போன்ற விபரங்கள் இருக்கும் . இதில் அவ்வப்போது தேவைப்படும் பொழுது அரசு சில மாற்றங்களை கொண்டு வரும் ஏனெனில் சந்தை முழுவதும் அவர்களிடம் செல்லாமல் இருக்க மற்றும் சந்தைகளில் ஒரு நிலையான போக்கினை ஏற்ப்படுத்த ...

தற்சமய நிலை என்ன ?
தற்போழுது சந்தைகள் அந்நிய முதலீட்டாளர்கள் கைபொம்மை ஆகி விட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே காரணம் நமது மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து விட்டது ஏனென்றால் அனைவரும் அதிக பட்ச விலைகளில் அதிக பங்குகளை வாங்கி வைத்துள்ளனர்.

நாம் அவர்களுக்கு நிகராக வர்த்தகம் செய்ய சந்தையில் தற்சமயம் யாரும் இல்லை . ஏன் முக்கிய நபர்களான DII'S, QNI'S ,HNI'S இவர்கள் கூட இன்று சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களை நிறுத்த முடியவில்லை .

இதே சிறிது காலங்களுக்கு முன்பு இவர்கள் அந்நிய முதலீட்டளர்களுக்கு எதிராக நின்று சந்தையை வலுஉள்ளதாக மாற்றினார்கள் . ஆனால் தற்போதைய நிலையில் சந்தையின் போக்கினை மாற்ற கூடிய அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் உருவெடுத்துள்ளனர் . ஆதலால் இவர்கள் சக்தி சற்று குறைந்து விட்டது .

அந்நிய முதலீட்டாளர்களை பொறுத்த வரை ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு கட்டமைப்பு இன்ன பிற தொழில் வளர்ச்சிகள் நன்றாக உள்ளது அல்லது வரும் காலத்தில் சிறப்பபாக இருக்கும் என கருதினால் அவர்கள் அதிக அளவு தொகையினை முதலீடு செய்வார்கள் .

அவர்கள் எடுத்து வரும் தொகையானது USD $ ஆக வரும் பொழுது சாதரணமாக சந்தையில் ஒரு பெரிய தொகையாக வந்து சேரும் . அரசாங்கமும் சந்தையின் நலன் மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் முதலீடு செய்யும் தொகையினை சமயத்தில் அதிகரிப்பார்கள் மற்றும் சில சலுகைகளையும் வர்த்தக சம்பந்தமாக அறிவிப்பார்கள் . இவர்களால் தான் சந்தைகள் ஒரு பெரிய அளவில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டாகிறது ..

நன்றி !!!

மீதி அடுத்த இடுகையில் தொடரவும் .......

வியாழன், 16 ஏப்ரல், 2009

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் 1 !!!

பதிவினை தொடரலாமா ???

சரி அந்நிய முதலீட்டாளர்கள் வாங்குவதால் சந்தைகளுக்கு நன்மை தானே மேலே செல்லாமல் ஏன் சந்தைகளில் சரிவுகள் வருகிறது ? ..

இவர்கள் பங்குகளை வாங்கி மட்டும் விற்ப்பனை செய்வது இல்லை . விற்றும் வியாபாரம் செய்வார்கள் நாம் செய்வது போல " SHORT SELLING " முறையில் இவர்களுக்கும் அனுமதி உண்டு . ஆனால் இவர்களுக்கு அதெற்கென ஒரு அளவு இருக்கும் அதை மீறி விற்க கூடாது .

ஆனால் நமது நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தினசரி வணிகர்களின் மனநிலையை புரிந்து கொண்டு குறிப்பிட்ட ஒரு குறைந்த பட்ச புள்ளிகளுக்கு அல்லது விலைகளுக்கு கீழே பங்குகளின் விலைகளை கொண்டு செல்வர்கள் .

அதனால் நமது வணிகர்கள் அதிக நஷ்டத்தினை தடுக்க மற்றும் " MTM " இழப்பை கட்ட முடியாமலும் குறைவான நஷ்டத்தில் சந்தையில் இருந்து வெளிவருவார்கள் . அவர்கள் அந்தநிலைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கும் படலத்தை ஆரம்பிபர்கள் .

அடுத்த நாள் சந்தைகளில் அதன் விலைகள் உயரும் நமது முதலீட்டாளர்கள் நஷ்டத்தினை குறைக்க திரும்ப விலை அதிகரிக்கும் என வாங்குவார்கள் வாங்கும் பொழுது அவர்கள் விற்று லாபம் பார்த்து வெளியேறுவார்கள் . இதற்க்கு முக்கிய காரணம் இவர்களின் பண பலம தான் .

சந்தை தவிர இவர்களின் முதலீடுகள் ???

அந்நிய முதலீட்டாளர்களை பொறுத்த வரை லாபம் சம்பாதிப்பது மட்டும் தான் குறிக்கோள் . வேறு எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் . இவர்கள் சந்தை முதலீடு உடன் நிறுத்த மாட்டார்கள் . நாளுக்கு நாள் என சந்தையையே மாற்றுவார்கள் . ஒரு சந்தையில் இருந்து இன்னொரு சந்தைக்கு முதலீடுகள் மாறும் .

அவற்றோடு அல்லாமல் தங்கம் மற்றும் உலோகங்கள் , கச்சா என்னை , மற்றும் கரன்சி வர்த்தகத்திலும் முதலீடு செய்வார்கள் ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என யாராலும் கணிக்க முடியாது . இவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உட ன்சந்தையை விட்டு வேகமாக உள்ளே வந்ததை விட விரைவாக வெளியே செல்வர்கள் ,.

DII'S --- HNI 'S ---- QNI 'S ,...

இதில் DII'S இல் வருபவர்கள் உள் நாட்டு பெரிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் . HNI"S என்பவர்கள் பெரிய பொருளாதார வசதி கொண்ட முதலீட்டாளர்கள் தான் . QNI'S என்பவர்கள் தனி நபர்களாக சந்தையில் அதிக தொகையினை முதலீடு செய்பவர்கள் . இவர்கள் அனைவரும் இருப்பதால் தான் சந்தைகள் சில சமயம் பெரிய சரிவுகளில் இருந்து தடுக்க படுகின்றன . மேலும் ஓரளவாவது இவர்களுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள் .

இவர்களுக்கு மேல் ஒரு பெரிய அதி புத்தி சாலிகள் ???

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு தொகையை சந்தைகளில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாள்கள் அல்லது குறிப்பிட்ட லாபம் வரும் வரை பங்கின் விலைகள் இறங்கினாலும் பங்குகளை விற்க மாட்டார்கள் . ஆனால் முதலீட்டு தொகையில் சிறிது இறங்கினாலே சந்தையில் இருந்து புலி பாய்ச்சலில் வெளி வருப்பவர்கள் தான்" ஹெட்ஜ் பண்டு " என்று கூறப்படுபவர்கள் .

இவர்களுக்கு அதிக லாபம் முக்கியமல்ல ஆனால் முதலீடு குறையாமல் பார்த்து கொள்வார்கள் முதலீடு குறைந்தால் எதை பற்றியும் கவலைப்படாமல் சந்தையை விட்டு வெளியேறிவிடுவார்கள் .. அதனால் தான் சந்தைகள் சில சமயங்களில் வேகமாக சரிகிறது ..

நன்றி !!!

அன்புடன்
ரமேஷ்