செவ்வாய், 19 மே, 2009

வணக்கம் நண்பர்களே !!!

சந்தையின் நிலையற்ற போக்கினை வைத்தும் மற்றும் எனது சொந்த தொழில் முறையான விசயங்களை வைத்தும் இந்த மாதம் இறுதி வரை வலை பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் என்பதினை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .

மீண்டும் ஒரு சிறிய அறிவிப்பிற்கு பின் வழக்கம் போல எனது பதிவினை தொடர உள்ளேன் .

தயவு செய்து புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்குள் இப்போதைய சூழலில் உள்ளே செல்ல வேண்டாம் , மேலும் பழைய முதலீட்டாளர்கள் இந்த நிலைகளில் லாபத்தினை உறுதி செய்ய தவற வேண்டாம் . தினசரி வணிகர்கள் இம்மாத இறுதி வரை சந்தைக்குள் வர வேண்டாம் ..

நன்றி !!!

அன்புடன்

ரமேஷ் ..

திங்கள், 18 மே, 2009

சூடான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி !!!

காங்கிரஸ் கட்சி திரும்ப வெற்றி பெற்று ஆட்சிஅமைப்பது சந்தைகளுக்கு பலமான ஒரு செய்தியாகும் . நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் எதற்காக தொடர்ச்சியாக வாங்கி வந்தனர் என்பது இப்பொழுது தான் எனக்கும் மற்ற அனைவருக்கும் இன்று தான் விளக்கம் கிடைக்கும் .

நமது சந்தையில் வணிகம் செய்யும் சிறு சிறு நபர்களை எல்லாம் சந்தைகள் சரிவின் பொழுது சந்தையை விட்டே ஓரளவு விலக்கி விட்டனர் இன்னும் சிலரை இந்த உயர்வில் காணாமல் போக செய்து விடுவார்கள் நமது அந்நிய முதலீட்டாளர்கள் . காரணம் நமது ஆட்கள் இன்று முழுவதும் வாங்கும் படலத்தில் இருப்பார்கள் அவர்கள் விற்கும் படலத்தில் இருப்பார்கள் .

இன்றைய ஆசியசந்தைகள் அனைத்தும் 2 % அளவிற்கு சரிவில் துவங்கி உள்ளன . இவை அந்த சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்யும் நிலைகளாக இருக்கலாம் . மேலும் நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளை பின் தொடராது .

நமது சந்தைகள் இன்றைய துவக்கம் அந்நிய முதலீட்டாளர்கள் கையில் உள்ளது . அவர்கள் சந்தையை எது வரை கொண்டு செல்ல விருப்பமோ அது வரை கொண்டு செல்வார்கள் என்று நினைக்கிறேன் . மேலும் நமது மக்களில் பெரும்பாலும் " செல்லிங் " இல் உள்ளனர் அதை அந்நிய முதலீட்டாளர்கள் அதிக புள்ளிகள் இழப்பிற்கு வாங்க செய்வார்கள் என நினைக்கிறேன் .

காங்கரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சந்தைகளில் சரிவுகள் தடுத்து நிறுத்த முடியாது . சந்தையில் தற்சமயம் உள்ள நிலைகளே சற்று அதிகம் என எல்லோராலும் கணிக்கப்பட்டுள்ளது . ஆகவே சந்தையில் வாங்க வேண்டாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள் . இந்த உயர்வுகள் ஒரு வித மாயை போன்ற தோற்றம் தான் . இது தான் இன்றைய சந்தையின் தாரக மந்திரம் . இதை தான் என் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன் .

மேலும் அதிக ரிஸ்க் எடுத்து ( அதாவது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என கருதி புட் மற்றும் செல்லிங் இல் இருக்கும் நபர்கள் சந்தை துவக்கத்தில் சற்று சந்தையில் இருந்து வெளியேறுங்கள் மீண்டும் சம்பாதிக்கலாம் . தற்போதைய நிலவரப்படி சிங்கபூர் நிப்டி 13 % வரை அதிகரித்து 441 புள்ளிகள் உயர்வில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . )

நமது சந்தைகளில் மே இறுதி வரை சந்தைகளில் சற்று அதிக உயர்வுகள் மற்றும் குறைந்த சரிவுகள் வரும் என நினைக்கிறேன் . ஆகவே முடிந்த வரை சந்தையில் இருந்து சற்று விலகி இருங்கள் .

நிப்டி நிலைகள் ----

இன்று நிப்டி எல்லா எதிர் நிலைகளையும் கடந்து தான் சந்தைகள் துவங்கும்

நன்றி !!!

சனி, 16 மே, 2009

கடந்த வார சந்தைகள்

கடந்த வார சந்தைகள் !!
INDICES == WKLY CLS = CHANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9265.02 = -169.81 .
FTSE = 4348.11 = -113.98 .
DOW JONES = 8268.64 = -306.10 .
NASDAQ = 1680.14 = -58.80 .
HANG SENG = 16790.70 = -598.30 .
KOSPI = 1310.34 = -102.79 .
NIFTY = 3671.65 = +51 .
SENSEX = 12173.42 = + 297.50 .
SGX NIFTY = 3695 = +75 .50 .

*********** ************* ****************
நேற்றைய சந்தைகள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவுள்ள பரபரப்பான சூழலில் வார இறுதி வர்த்தக தினமாக கொண்டு வர்த்தகம் துவங்கியது . சந்தையில் பெரிதாக சரிவுகள் எதுவும் வரவில்லை . நமது சந்தைகள் துவக்கம் 1 % வரை அதிகரித்து துவங்கின .

ஆசிய சந்தைகள் காலை துவக்கம் முதலே உயர்வில் வர்த்தகம் நடந்தது . மேலும் நமது சந்தைகள் விற்ப்பனை வாங்குவது இரண்டும் அதிகரித்தது . மேலும் அந்நிய முதலீட்டாளர்கள் கடந்தவாரத்தில் அதிக அளவில் முதலீடுகளை நமது சந்தைகளில் மேற்கொண்டுள்ளதாக கருதுகிறேன் . ஆசிய சந்தைகள்முடிவில் 1.5 % - 2 % வரை உயர்ந்துள்ளது .

நமது சந்தைகள் ஆசிய சந்தைகளின் முடிவில் 2 % வரை உயர்வில் வர்தகமாகி கொண்டு இருந்தது . அனைவரும் எதிர் பார்த்தபடி சந்தைகளில் பெரிதாக நிலைகள் எதுவும் செல்லிங் செய்யப்படவில்லை . மாறாக சந்தைகள் மேலே ஏற துவங்கி சந்தைகள் முடிவில் 2.5 % உயர்வில் முடிந்தன .

நேற்றைய சந்தையில் அரசியல் சம்பந்தமான செய்திகள் எதுவும் வராதது சற்று ஆச்சர்யமே . !!!

சந்தைகள் சிறிதும் பாதிப்பின்றி வர்த்தகம் நடந்தது .

நேற்றைய அமெரிக்காசந்தைகள் " பிளாட் " நிலைகளில் வர்த்தகம் நடந்தன . அங்கு வந்த பொருளாதார அறிக்கைகள் சரிவர இல்லை மேலும் கடந்தவாரம் வந்த அனைத்து பொருளாதார சம்பந்தமான அறிவிப்புகளும் சற்று மோசமாக வந்தது குறிப்பிடத்தக்கது .

அமெரிக்கா சந்தைகள் முடிவில் மேற்சொன்ன சாதகமற்ற அறிவிப்புகளால் சந்தைகள் மேலே செல்ல முடியாமல் சரிவில் முடிந்தன . சரிவுகள் பெரிய அளவில் இல்லை .

நமது நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் உலகம முழுவதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது . நமது நாட்டின் தேர்தல் நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் ஆகியவற்றை வைத்து தான் உலக சந்தைகளில் வரும் நாட்களில் வர்த்தகம் நடைபெறும் என நினைக்கிறேன் .

நன்றி !!!

எந்த பொருளின் மதிப்பும் இழந்தால் தான் தெரியும் !

வெள்ளி, 15 மே, 2009

நேற்றைய சந்தைகள் 2% அளவிற்கு சரிவில் துவங்கின . உலக சந்தைகள் பலவும் 2 % - 3% வரை சரிவில் துவங்கின . ஆனால் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கி இருப்பதால் சந்தைகள் சரிவில் துவங்கியதும் பின்னர் உடனடியாக சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன . அந்த மீட்சி கிட்டத்தட்ட 1.5 % அளவிற்க்கு இருந்தது .

ஆனால் ஆசிய சந்தைகள் தொடர்ச்சியாக சரிவிலேயே வர்த்தகத்தினை தொடர்ந்தன . அதே சரிவுகளை வர்தகமாகி 2 % - 3% வரை சரிவில் முடிந்தன .

நேற்றைய இன்பிலேசன் அறிவிப்பு 0.48 VS 0.70 என வந்தது . இது சந்தைகளுக்கு சற்று சாதகமான அம்சம் தான் . மேலும் சந்தைகள் முடிவில் 1% அளவிற்கு மட்டும் சரிவடைந்து" 3593 "புள்ளிகளில் முடிவடைந்தன .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கின பின்னர் அங்கு வந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்த அறிவிப்பினால் சந்தைகளில் நகர்வுகள் சற்று பிளாட் ஆக இருந்தது . முடிவில் அமெரிக்க சந்தைகள் " பிளாட் " நிலைகளிலேயே முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றய சரிவின் எழுச்சியாக சற்று அதிகரித்து துவங்கி உள்ளன . ஆசிய சந்தைகள் 1.5 % வரை அதிகரித்து துவங்கி உள்ளன . நமது சந்தைகளுக்கு இந்த போக்கு சரிவராது மேலும் நமது சந்தைகள் நாளை வரவுள்ள தேர்தல் அறிவிப்புகளுக்காக இன்றைய தினம் அனேக நபர்கள் சந்தைகளில் இருந்து முழுவதுமாக வெளியேறலாம் என நினைக்கிறேன் .

அப்படி இருக்கும் பட்சத்தில் பியுச்சர் சந்தைகளில் உள்ளவர்கள் அதிக அளவில் செல்லிங் செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது . ஆதலால் சந்தைகளில் சரிவுகள் சற்று அதிகமாக வரலாம் .

நிப்டி இன்றைய நிலைகள் -----

அதரவு --- 3580 , 3550 ,3510 ..
எதிர்ப்பு --- 3610 ,3650 ,3683 ..

நன்றி !!!