வெள்ளி, 20 மார்ச், 2009

விழிப்புணர்வு இடுகை

விழிப்புணர்வு இடுகை !!! 2
----- இனி முக்கியமான விசயங்கள் பற்றி பார்போம் !!!

உலக அளவில் சந்தைகள் பற்றி பங்கு சந்தை நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சில --

அமெரிக்கா --------

*இங்கு தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை உள்ளது .இந்த நிலைமாறி நல்ல நிலைக்கு திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள் .

* இங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை 26 வருடத்திய அதிகப்படியாக உள்ளன ..

* தொடர்ச்சியாக அதிக வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டு வங்கிகள் மூடப்பட்டன ..

* பல தரப்பட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு எனும் பணியாளர் நீக்கம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது .

சீனா !!! -------

* இங்கு உள் நட்டு உற்ப்பத்தி முந்தய வருடத்தை விட குறைந்துள்ளது

* இன்பிலேசன் மிக அதிகமாக உள்ளது .

* பொருளாதார வளர்ச்சி மந்தமாகி வருகிறது ..

* உலகம் முழுவதும் பல இடங்களில் சீன விளையாட்டு உபகரணங்களை தடை செய்துள்ளனமற்றும் ஒலிம்பிக் நடத்திய பொழுது அதிக அளவு கட்டுமான பணிகள் மேற் கொண்டது .
ஹோட்டல் , லாட்ஜ் ஆகியவை தற்போது உபயோகமின்றி கிடக்கின்றன வந்தவரவை விட செலவு அதிகம் ..
கட்டு மான துறைக்கு நிறைய சலுகைகள் வழங்கி அதிகப்படியான பொருளை உற்பத்தி செய்து விட்டது ..
சம்பந்தப்பட்ட துறைகள் திரும்ப பழைய நிலையை அடைய சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்ற கருத்து நிலவுகிறது ..

இந்தியா ;-----

*பொருளாதார வளர்ச்சி 08 -09 இல் 7 % தான் என உள்துறை அமைச்சகமும் மற்றும் நிதி அமைச்சகமும் கூறுகிறது .. ஆனால் பொருளாதார நிபுணர்கள் கணிப்பின் படி 5 % to 6 % தான் வரும் என என்கிறார்கள் ..

*இன்பிலேசன் குறைந்து 3% அளவிற்கு வந்துள்ளது ஆனால் விலைவாசி அப்படியே உள்ளது .. இது பின்னாளில் ஒரு பிரச்சனை தான் ..

*பங்கு சந்தைகளில் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சி இந்த வீழ்ச்சியால் பல பரஸ்பர நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன ..பங்குகளின் விலை வீழ்ச்சியால் மக்கள் பணம் கணக்கில்லாமல் இழப்பு ஏற்படுகிறது.இந்த சூழலில் இனி வரும் காலங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மக்களிடம் புதிய முதலீடு வாய்ப்புகளை பெற முடியுமா என தெரியவில்லை ..

*இனி வரும் காலங்களில் உள் நட்டு கட்டமைப்பிற்கு எவ்விதங்களில் முதலீடுகள் வரும் என உறுதியாக தெரியவில்லை இந்த துறை கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது .

*இந்தியாவை பொறுத்த வரை அனைத்து துறைகளும் தற்சமயம் மிகவும் நலிவடைந்த சூழலில் உள்ளது ..

*இங்கு இன்னும் அதிக பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது .

ஜப்பான் ------

* இங்கும் பொருளாதார மந்தநிலை ஆரம்பமாகிவிட்டது ஆனால் பெரியதாக எதுவும் வரவில்லை . கடந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 3.27 % அளவிற்கு சரிவடைந்துள்ளது .வரும் காலாண்டில் அது இன்னும் சரிவடைந்து சரிவு 5.7 % இருக்கும் என கணக்கிட்டுள்ளனர் .

* ஆனால் இன்னும் சில மாதங்களில் மந்த நிலை வரலாம் என வல்லுனர்கள் கூறுகின்றனர் .

*அங்கு வங்கிகளுக்கு பெரிதாக எதுவும் பதிப்பு இல்லை .

*பேங்க் ஆப் ஜப்பான் சில கட்டு பாடுகள் விதித்த பொழுதும் , சந்தையும் அங்குள்ள சூழ்நிலைகளும் தற்சமயம் சீராகி வருகிறது .

*ஆனால் அடுத்த வருடத்தில் அங்கும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை மற்றும் பிரச்சனைகள் உருவாகும் என்பது வல்லுநர் களின் கருத்து ...

@@ இந்த இடுகை இத்துடன் முடிந்தது @@

நண்பர்களே இதுபோல உலக நாடுகளின் நிகழ்வுகள் மற்றும் சந்தை பற்றிய இடுகைகளை விழிப்புணர்வு இடுகை என்ற பெயரில் அடிக்கடி எழுத உள்ளேன் .

முடிந்தால் ஊக்குவியுங்கள்

நன்றி !!

என்றும் உங்கள் நண்பன்

ரமேஷ்

விழிப்புணர்வு இடுகை

விழிப்புணர்வு இடுகை !!! 1
தற்போதைய நிலை :---

தற்போது சில மதங்களில் பாராளுமன்ற தேர்தல்நடக்கவுள்ளதாகவும் அது சம்பந்தமான தேதிகளும்விசயங்களும் வந்து கொண்டுள்ளன . இந்த தேர்தல்விஷயம் அந்நிய முதலீட்டாளர்களை சற்று அச்ச படவைக்கிறது .

அவர்களுக்கு ஏதுவாக தான் உலக சந்தைகள்பலவும் நமது சந்தைகளை காட்டிலும் குறியீடுகள்குறைவாகவும் பங்குகளின் விலைகள் குறைவாகவும்உள்ளன ..

குறிப்பாக பல சந்தைகள் 52 வாரகுறைந்த பட்சவிலைகளுக்கு கீழும் ,மற்றும் சில சந்தைகள் பலவருடங்களுக்கு முந்தய குறியீடுகளுக்கு கீழும் வர்த்தகம்ஆகி கொண்டு உள்ளன .. நமது சந்தைகள் இன்னும்அக்டோபர் 2008 இன் நிலைகளுக்கு கீழ் கூட செல்லாமல்உள்ளன ..

இந்த சூழலில் பங்குகள் வாங்கலாமா ?????

நமது மக்கள் இந்நிலையில் பங்குகளைவாங்க கூடாது .. ஏன் எனில் சில அந்நிய முதலீட்டாளர்கள்ஆபரேட்டர்கள் செயற்கையாக சில பங்குகளின்விலைகளை ஏற்றி வருகிறார்கள் அவை விரைவில் கீழேஇறங்கும் திடீர் ஏற்றம் தற்காலிகமானது தான் ..

எப்பொழுது இந்த நிலைமை மாறும் ???

தற்போதைய சூழலில் சந்தைகள் ஆட்சி மாற்றத்திற்குபிறகு தான் ஓரளவாவது பெரிய சரிவுகள் நிறுத்தப்பட்டுசிறிய ஏற்ற இறக்கங்களை எதிர் பார்க்கலாம் .. ஆனால்பங்குகளின் விலையில் ஏற்றம் வர சில மாதங்கள்ஆகலாம் ? ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம் ..

ஆகவேஅதிக தொகையில் வாங்கியவர்கள் சந்தைகள் கீழே வரும்பொது பொறுத்து சராசரி (avg ) செய்யவும் . ஆனால்அதையும் ஒரே தடவையில் வாங்க வேண்டாம் சிறிதுசிறிதாக மறு முதலீடு செய்யலாம் ..( இது சந்தை இறக்கத்திற்கு மற்றும் தங்களின்முதலீட்டுக்கும் ஏற்ப )

@@ இடுகை முடிவுற்றது @@----------


தொடர்ச்சி இடுகையை காணவும் ------------------


கடந்த
இரு தினங்களாக எதிர் பார்த்த ஆசிய சந்தைகளின் " profit booking " நேற்றும் வரவில்லை . ஆசிய சந்தைகள் அனைத்தும் " FLAT " ஆகமுடிந்துள்ளன .

இன்பிலேசன் வரவிற்காக நமது சந்தைகள் ஏறுமுகத்தில் இருந்தன . இன்பிலேசன் எப்போதும் இல்லாத அளவாக 0.44 vs 2.43 என்று வந்துள்ளது . வரும் நாட்களில் இன்பிலேசன் போய் டெபிலேசன் கூட வரலாம் என வல்லுனர்கள் கணித்து உள்ளனர்..

இன்பிலேசன் அறிவிப்பிற்கு பின்னர் சந்தைகள் சிறிதளவு இறங்கின .சந்தைகள் முடிவில் ஏற்றத்தில் சில புள்ளிகளை இழந்து 2800.75 (+ 11) இல் நிலை கொண்டன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் 1 % அளவிற்கு இறங்கி உள்ளது . நேற்றய வேலை இல்லாதோர் அறிவிப்பில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது .. இது முந்தய அளவை விட அதிகம் ..

ஜப்பானிய சந்தைகள் இன்று விடுமுறை ஆதலால் ஆசிய சந்தைகள் இன்றைய துவக்கம் சற்று " FLAT " ஆக இருந்தன . ஆசிய சந்தைகளின் போக்கும் சற்று மந்தமாகவே இருக்கும் என நினைக்கிறேன் ..
வரும் வாரம் " FUT " சந்தைகளின் முடிவு வருவதால் சந்தையில் வரும் நாட்களில் சரிவுகள் மற்றும் PROFIT BOOKING வரலாம் என நினைக்கிறேன் .

சந்தைகளை பொறுத்தவரை இப்போதைய சூலில் லாபத்தினை உறுதி செய்வது தான் நல்லது .........

AKRUTI NIRMAN --------

தேசிய பங்கு சந்தையில் வணிகமாகி வரும் இந்த பங்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் . 125 % பங்கின் விலை( 2350 vs 1000 )அதிகரித்துள்ளது ..இந்த பங்கின் பெயரை கேட்டாலே சந்தையே அலறுகிறது இதுதான் இன்றைய நிலை ஏன் என புரியாத சூலில் இதுவரை எந்தபங்கும் இது போல் ஏறியதாக தெரியவில்லை .(சந்தை இறங்கு முகத்தில் )..

நேற்றைய சந்தையில் செபி தனது பார்வையை அக்ருதி பக்கமாக திருப்பியது .. உடன் அந்த பங்கின் வணிகத்தை உற்று கவனித்து பின்னர் உடனடியாக அந்த நிறுவன பங்கை "FUT " வர்த்தகத்தில் மார்ச் மாதத்துடன் தடை செய்தது . பின்னர் EQ பிரிவில் இருந்து BE TRADE TO TRADE என்ற முறைக்கு மாற்றியது .. செபியின் இந்த செயல் பாராட்டப்பட வேண்டியதுதான் .....

ஆனால் சில பங்குகளின் விலைகள் ஒரே நாளில் 20 % TO 60 % வரை அதிகரிப்பது சந்தையில் தற்சமயம் நடந்து வருகிறது ..

செபி இதையும் கவனித்தால் நல்லது !!!

நிப்டி நிலைகள் இன்று ---=

SUP ; 2780 , 2750 , 2720 ..
RES ; 2810 , 2830 , 2850 ...

நன்றி !!!

வியாழன், 19 மார்ச், 2009


சந்தையில்
நாளுக்கு நாள் உயரங்களை பார்க்கும் வாய்ப்புகள் தற்சமயம் கிடைத்துள்ளது .

நேற்றைய சந்தையில் நிப்டி அமெரிக்க மற்றும் ஆசியசந்தைகளின் "gap up " ஐ ஒட்டி " gap up " இல் துவங்கியது .முக்கியமான எதிர் நிலையாக கருதப்பட்ட 2691 புள்ளிகளை எளிதில் கடந்து அதற்கு மேலும் அங்கிருந்து 2810 கடின நிலையையும் கடந்து 2830 வரை சென்றன .

ஏற்கனவே கூறியது போல் 2810 நிலைகளிலேயே "selling pressure " ஆரம்பம் ஆகி விட்டது .பின்னர் மதியத்திற்கு மேல்சந்தைகள் சரிய ஆரம்பித்தது . இறுதியாக சந்தைகள் 2779. 80 புள்ளிகளில்முடிவுற்றன .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் " FED " அமைப்பின் வட்டி அறிவிப்புக்காக ஒய்வு எடுத்தன .அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் சந்தைகள் சற்று மேலே வர தொடங்கின . ஏற்கனவே வட்டி விகிதம் அங்கு 0.0 vs 0.25 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் நேற்றைய அறிவிப்பில் வட்டி அதிகரிக்க கூடும் என எதிர் பார்த்தார்கள் ." FED " அமைப்பு பொருளாதார பிரச்சனைகள் ஓரளவு கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டுள்ளதாகவும் இன்னும் சிறிது நாளுக்கு இதே வட்டி தான் என்றும் அறிவித்தது . முடிவில் அமெரிக்க சந்தைகள் 1 % to 2 % வரை உயர்ந்தன .

இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளை போக்கினையே பிரதிபலிக்கும் .நேற்று முடிந்த ஐரோப்பிய சந்தைகள் 1% அளவுக்கு சரிவில் முடிந்துள்ளன .ஆதலால் இன்று மதியத்திற்கு மேல் ஐரோப்பிய சந்தைகள் துவங்கிய பின்னர் சந்தையின் வேகம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கிறேன் .தற்சமயம் சந்தையில் உள்ள குறுகிய கால முதலீட்டாளர்கள் வெளியேறி லாபத்தினை உறுதி செய்யலாம் ..

இன்றைய சந்தையில் நிப்டி 2750 to 2810 க்கும் இடையில் வர்த்தகம் நடக்கும் என எதிர் பார்க்கலாம் .. எதில் எந்த நிலைகள் பக்கமாக சந்தைகள் செல்கிறதோ அந்த நிலையில் எனது அதரவு மற்றும் தடை நிலைகள் வரை செல்லலாம் ..

நிபிட்டி நிலைகள் ;-------

sup ; 2778 , 2750 , 2720 ...
res ; 2790 , 2810 , 2830 ...

today pick's
--

நண்பர்களே இந்த பகுதியில் நான் கொடுக்கும் பங்கு பரிந்துரைகளை சில நாட்களுக்கு மட்டும் நிறுத்த உள்ளேன் ..

சில சமயங்களில் " GAP UP " துவக்கம் மற்றும் " GAP DOWN " துவக்கம் இரண்டும் வரும் பொழுது சில நாட்களில் துவக்கத்திலேயே ஸ்டாப் லாஸ் மற்றும் இலக்குகள் வந்து விடுகிறது .

அதலால் ஏப்ரலில் இருந்து முடிந்த வரை சரிவர தர முயற்சிக்கிறேன் .

நன்றி !!!

புதன், 18 மார்ச், 2009


நேற்றைய
சந்தைகள் " flat " ஆக துவங்கி இடையில் ஊசலாட்டம் தொடர்ந்தது . பின்னர்" bank of japan " இன் சந்தை ஊக்குவிப்பு அறிவிப்பினால் ஜப்பானிய சந்தை 3 % அளவிற்கு எழுச்சி அடைந்தன . அதை வைத்து ஆசியசந்தைகள் 3 % அளவிற்கு எழுச்சியடைந்தன ..

இந்நிலையில் நிப்டி 2750 , 2778 .ஆகிய எதிர் நிலைகளை கடந்து 2800 ஐ அடைந்தன .. அதன் பின்னர் சந்தைகள் முடிவில் 2751 புள்ளிகளில் நிலை கொண்டன . முன்பு சொன்னது போல் வலுவான காரணிகள் எதுவும் இல்லாததால் " 2810 " ஐ தொட முடியவில்லை என நினைக்கிறேன் ..

நேற்று முடிந்த அமெரிக்கசந்தைகள் திடீரென எழுச்சி அடைந்தன.
dow = 2. 48 % .nasdaq = 4.14 % மும் உயர்ந்தன ..
அமெரிக்க சந்தைகள் கடந்த வாரமும் நேற்றும் எதுவும் விஷயம் இல்லாமல் சந்தையை மேலே ஏற்றுகின்றனர் . இது எதனால் என்பது புரியவில்லை ...

இனி இன்று !!!!!

இன்றைய சந்தையில் நிப்டி 2720 என்ற அதரவு நிலையையும் 2778 என்ற எதிர் நிலையையும் கொண்டு வணிகமாகும் . இதில் எந்த நிலைகள் உடைபட்டாலும் அந்த பக்கம் அதிக நகர்வுகளை எதிர் பார்க்கலாம் .
ஆசிய சந்தைகளை பொறுத்த வகையில் பிளாட் துவக்கமாக உள்ளன. ஆசிய சந்தைகளில் இன்று லாபத்தினை உறுதி செய்வார்கள் என நினைக்கிறேன் .இந்த நிலை உலக சந்தைகளிலும் வரலாம் என எதிர் பார்க்கிறேன் ...

இருந்தாலும் கவனம் தேவை !!!!

நிப்டி நிலைகள் :----------

sup : 2750 , 2720 , 2690 ..
res : 2778 , 2810 , 2840 ..

today pick's -------

sell nifty @ 2745 to 2755 sl 2781 tgt 2725 , 2700 , 2673 ..
sell infosys @ 1268 to 1272 sl 1279 tgt 1259 , 1245 , 1233 ..

நன்றி !!!