திங்கள், 23 மார்ச், 2009

பங்கு சந்தை ஒரு அலசல்

வணக்கம் நண்பர்களே !!!

பங்கு சந்தை என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது -- பங்கு சந்தை பற்றி தெரிந்தவர்களுக்கு ஹர்சர் மேத்தா - தெரியாதவர்களுக்கு இது ஒரு சூதாட்டம் -- இப்படி தான் நம் மக்கள் தவறாக எல்லாவற்றையும் புரிந்து கொள்வது போல இதையும் புரிந்து வைத்துள்ளனர் . ஆனால் அப்படி அல்ல பங்கு சந்தை என்பது ஒரு ஊகவணிகம் . ஊக வணிகம் என்றால் தகவல் மற்றும் செய்திகள் அடிப்படையிலான வணிகம் ஆகும் . சந்தை மற்றும் அதன் அனைத்து விபரங்களையும் கீழே வரிசையாக பார்க்கலாம் .

முதலில் பங்குகள் என்றால் என்ன ?
**************************************

எந்த ஒரு தனியார் நிறுவனமும் தனது விரிவாக்க பணிகளுக்காக தேவைப்படும் தொகையினை மக்களிடம் பெற்று அதை கொண்டு தனது விரிவாக்க பணிகளை செய்யலாம் . அந்நிலையில் மக்களுக்கு அவர்களின் முதலீட்டுக்கு உண்டான அளவுக்கு பங்குகள் வழங்கப்படும் . இந்த பங்கு வெளியீடுக்கு அந்த நிறுவனங்கள் முறையான நிர்வாகம் மற்றும் வரவு செலவுகள் பிற செயல்பாடுகளையும் குறித்து செபிக்கு விண்ணப்பிக்க வேண்டும்..

அந்த விபரங்களை பரிசீலித்து செபி அவர்களுக்கு பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கும் . அந்த பங்குகள் எல்லாம் முகமதிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் . அவை நிறுவனத்தின் மொத்த மதிப்பில் இருந்து (இருப்பு ,சொத்து , கடன் , இதர இருப்புகள் ஆகியவற்றை கொண்டு) மொத்த மதிப்பில் இருந்து 10 ரூபாய் மதிப்பிற்கு கணக்கிட்டு பங்குகளை முகமதிப்பில் வெளியிடுவார்கள் . வெளியீட்டுக்கு பிறகு அந்த நிறுவனக்கள் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்படும் .

IPO ( INITIAL PUPLIC OFFER )---
***********************************
புதிய பங்கு வெளியீட்டில் இறங்கும் நிறுவனங்கள் செபி அமைப்பில் முறையான அனுமதி பெற்று பின்பு நேசனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் , மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சஞ் ஆகிய எக்ஸ்செஞ்ச்களில் அறிவிப்பு செய்து பின்னர் பங்கு வெளியீட்டு விண்ணப்பங்களை மக்களுக்கு வழங்கும் அதன் விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஸ்டாக் புரோக்கர் மற்றும் வங்கிகளிலும் கிடைக்கும் .

அதற்க்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவு தேதியும் அறிவிப்பார்கள் . விலைகள் விண்ணப்ப படிவத்தில் இருக்கும் பங்குகளின் முகமதிப்பு 10 - ஆனால் விலை சந்தையில் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் விலைகளை வைத்து( பிரிமியம் ) இருக்கும் . ஆனால் 10 ரூபாய்க்கு கிடைக்காது . நாம் முதலீடு செய்வது என முடிவு செய்ததும் விண்ணப்ப படிவத்தில் நமது விபரங்களை தந்து முதலீட்டு தொகைக்கான காசோலை அல்லது வங்கி டிமாண்டு டிராப்ட் தர வேண்டும் . வரப்பெற்ற மொத்த விண்ணப்பங்களையும் கொண்டு அனைவருக்கும் வழங்குவார்கள் . விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் பிரித்து வழங்குவார்கள் .

ஸ்டாக் எக்ஸ்சேஞ் ---
***************************
நமது நாட்டில் இரண்டு பங்கு சந்தைகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றன . இவற்றில் தினமும் பங்குகள் வாங்கி விற்று வர்த்தகம் நடை பெரும் இதற்க்கு இரண்டாம் தர சந்தை என அழைக்க படுகிறது . இவற்றில் பங்குகளை வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே நடை பெரும் பரிமாற்றத்தை மட்டும் பங்கு சந்தைகள் செய்து தருகின்றன . அதனால் எக்ஸ்சேஞ் களுக்கு பரிமாற்ற கமிசன் மற்றும் நிறுவனக்கள் செலுத்தும் ஆண்டு சந்தா கிடைக்கிறது . அரசாங்கத்திற்கு வரி கிடைக்கிறது .

செபிக்கு பங்குகள் அனுமதியின் பொழுது செலுத்தும் கட்டணம் மற்றும் விதிமுறை மீறுபவர்கள் செலுத்தும் அபராதங்கள் செபிக்கு கிடைக்கிறது .

பங்குகள் அந்தந்த நிறுவனங்கள் முறைப்படி குறிப்பிட்ட அளவிலான பங்குகளை லிஸ்ட் செய்து இருப்பார்கள் அதற்க்கு எக்ஸ்சேஞ் இக்கு குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும் . இதற்க்கு முன்னர் கூறிய ஐ பி ஒ என்பது முதல் தர சந்தை , இது இரண்டாம் தர சந்தை புரிகிறதா நண்பர்களே . இது போல முதல் தர சந்தையில் வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாளில் மட்டும் லிஸ்டிங் என்ற பெயரில் வணிகம் செய்யப்படும் . அடுத்த நாள் முதல் தொடர்ச்சியாக வர்த்தகம் சந்தையில் அந்த பங்குகளின் மீது மேற்க்கொள்ளப்படும் .

பங்கு சந்தையில் எப்படி வியாபாரத்தை ஆரம்பிப்பது ???
***********************************************************

பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய முதலில் சந்தை பற்றிய சிறிதளவாவது அனுபவம் தேவை . பின்னர் வருமான வரி அட்டை மற்றும் உங்களது முகவரி சான்று பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றை தந்து டிமாட் கணக்கினை உங்கள் பகுதியில் உள்ள ஸ்டாக் ஆபீஸ் இல் துவங்க வேண்டும் பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் . அந்த கணக்கில் தொகையினை செலுத்தி பங்குகள் வாங்க விற்க பயன் படுத்தலாம் . கணக்கினை சம்பந்தப்பட்ட நிறுவனம் பார்த்து கொள்ளும் . கணக்கின் விபரங்களை தினமும் மின் அஞ்சல் முறையில் உங்களுக்கு வழங்கும் .

முறையீடு ----
*****************
மேற்குறிப்பிட்ட தங்களது கணக்கில் கோளாறுகள் ஏதேனும் ஏற்ப்பட்டால் நீங்கள் பங்கு சந்தையில் அதற்கென நியமிக்கப்பட்ட நபர்களிடம் மின் அஞ்சல் மற்றும் கடிதம் வாயிலாக முறையிடலாம் . சந்தைகள் பற்றி குறைபாடு என்றால் செபியில் முறையிடலாம் .

நன்றி !!!

அடுத்த பதிவில் மிச்சம் உள்ளதை கூறியுள்ளேன் ..

தொடர அடுத்த பதிவினை ---

என்னை பற்றி !!!

வணக்கம் நண்பர்களே !!!!

என்னை பற்றி .....

உண்மையாக சொன்னால் நான் ஒரு அவசர குடுக்கை (இப்படி ஆரம்பிப்பது தான் சரி )..........

எனது பெயர் பாமரன் வயது 28 தான் கடந்த ஆறுவருடங்களாக பங்கு சந்தையில் வியாபாரம் செய்து வருகிறேன் .. இந்த ஆறு வருடங்களில் எனது அனுபவம் என்ன என்று பார்த்தால் ...

நான் பங்கு சந்தையில் நுழைந்த போது இன்று உள்ளது போல் அதிக விஷயம் தெரிந்த ஆட்கள் இல்லை மற்றும் சரியான வழிகாட்டுதலும் இல்லை .. எனது ஓரிரு நண்பர்கள் பங்கு வணிகம் செய்து வந்தனர் .. அவர்களிடம் சந்தை பற்றி சில விஷயங்கள் மட்டும் கேட்டு அறிந்தேன் ..பின்னர் அனேக விஷயங்கள் புத்தகம் வாயிலாகவும் மற்றும் வலை தளங்கள் உதவியுடனும் தேடி தேடி அறிந்தேன் ..

ஆனால் அதற்குள் சின்ன சின்ன இடைவெளியில் சந்தைகள் என்னை ஆசை பட .. நானும் நம்பி உள்ளே வந்தேன் ..

வந்தவுடன் @@@@@@@@@@@@@@@@@@

தினசரி பங்கு வணிகம் , கமாடிட்டி வணிகம் , புட் மற்றும் கால் ஆப்சன் மற்றும் பியுச்சர் வணிகம் என எல்லாம் செய்து அனுபவம் தான் பெற முடிந்தது .. பல லட்சங்கள் இழந்தது தான் மிச்சம் .. பின்னர் ஒரு நாள் அதிக பட்ச இழப்பாக பல லட்சங்களில் இழந்து விட்டு யோசித்த பொழுது தான் பங்கு சந்தையில் நிதானம் பொறுமை இரண்டும் மிக அவசியம் ..

இவை இரண்டும் எனக்கு இருந்தது ஆனால் அதிகமா தேவை என்பது இழப்புக்கு பின்னால் தான் தெரிந்தது .. அதைவிட முக்கியம் தன்னம்பிக்கை .. சந்தைகள் எப்போதும் இருக்கும் ஆனால் நாம் சந்தையில் இருக்க வேண்டும் ...

சந்தை
என்பது கடல் போல கரையில் இருந்து பார்த்தால் சாதாரணமாக தான் இருக்கும் . கடல் அலை போல வந்து தங்கள் காதுகளில் சில விபரங்களை கூறி உள்ளே வர செய்யும் .............................

( மச்சான் உள்ளே போனாலே பணத்தை அள்ளிடலாம் .. சாக்கு பை தான் வேண்டும் ) உள்ளே இறங்கினால் தான் சில அல்ல பல விசயங்கள்
தெரியும் ..

நானும் ஒரு வருடம் ஆனதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல அலங்காரத்துடன் காலரை தூக்கிக்கொண்டேன் .. உள்ளே வேகமாக சென்று கொண்டு இருந்தேன் .. அப்பொழுது தன் தெரிந்தது வண்டியில் பிரேக் இல்லை முட்டி மோதி விழுந்து .. எழுந்து நின்றேன் ..

(நின்றேன் என்பது ஒரு வார்த்தை எழுந்து நிற்க என்பது நஷ்டத்தை வைத்து அல்ல சந்தையில் ஏற்பட்ட அடிகளை வைத்து ) பல இழப்புகளை சந்தித்தேன் ..

பின்னர் பல விசயங்களை எனது அறிவுக்கு அப்பாற்பட்டு தேட ஆரம்பித்தேன் ...

இழப்பு ஒன்று தான் மனிதனை பல விசயங்களில் சீர்படுத்தி ஒழுங்கு படுத்தும் ..

அது போல எனது இழப்புகள் என்னை சரி வர ஒழுங்கு படுத்தியது .

பின்னர் என் போல பலர் உள்ள நமது தமிழ் மண்ணில் தமிழிலேயே சந்தை பற்றி எழுதினால் அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே என்று தோன்றியது

எழுத ஆரம்பித்து ................................. எழுதினேன் ..................................

முடிந்த வரை எழுதிக்கொண்டே இருப்பேன் ....

உங்கள் ஆதரவுடன்
அன்புடன்
பாமரன்

சனி, 21 மார்ச், 2009

புதிய முதலீட்டு அறிமுகம்

புதிய முதலீட்டு அறிமுகம் !!!!

நிப்டி பீஸ் (nifty bees )...

நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் , குறுகிய கால முதலீட்டாளர்களுக்கும் மற்றும் பரஸ்பர நிதியகங்களில் (mutual fund ) . சிறிய தொகையினை கொண்டு முதலீடு செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கும் ( mutual fund 's குறைந்தபட்ச முதலீடு 5000/- ) ஏற்ற EQ பங்கு இது ..

EQ பங்கு போலவே நிப்டி பீஸ் யையும் வாங்கி உங்களது .. " D MATE " கணக்கில் வைத்து கொள்ளலாம் ..
கால வரையறை எதுவும் கிடையாது ..
விலை ஏறும் போது விற்று லாபம் பார்க்கலாம் ..
இதுவும் மற்றபங்குகள் போலவே ஈவு தொகை ( DIVIDEND ) போனஸ் (BONUS ) யும் உண்டு ... முக மதிப்பு 10 அதன் அடிப்படையில் தான் ஈவு தொகை வழங்குவார்கள் ...

சந்தையில் நிப்டி பீஸ் வியாபாரம் ஆவது , S& P CNX NIFTY என்ற இன்டெக்ஸ் அடிப்படையில் தான் . ஆகவே இன்டெக்ஸ் மேல்முகமாக இருக்கும் போது விற்று லாபம் பார்க்கலாம் ...

கீழே வரும் போது வாங்கலாம் ..மேலும் இன்டெக்ஸ் 'இன் பாயிண்ட் யை 10 ஆல் வகுத்தால் வருவது தான் நிப்டி பீஸ் 'இன் விலை (cmp ).

சந்தையின் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப (ஏறு முகம் மற்றும் இறங்கு முகம் ) பிரிமியத்தில் இருக்கும் இல்லையெனில் அதே விலையில் வணிகமாகும் ..

சந்தையில் நிப்டி பீஸ் போலவே மற்ற பீஸ் களும் உள்ளன .. அவை கோல்ட் பீஸ் , ஜுனியர் பீஸ் , பேங்க் பீஸ் , psu பேங்க் பீஸ் , ஆகும் ..ஆனால் நிப்டி பீஸ் உங்கள் முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது ..

மற்ற பீஸ்" இல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலீடு செய்யலாம் ...

நன்றி .!!!

விழிப்புணர்வு இடுகை


விழிப்புணர்வு இடுகை !!!
நாளுக்கு நாள் சரிவடைந்து வரும் சந்தைகள் மற்றும்பங்குகளின் விலைகள் எங்கே சென்று நிற்கும் எனநிர்ணயிக்க முடியாத சூழல் தற்சமயம் உள்ளது .நமது பங்குசந்தைகளின் தற்போதைய நிலை இது தான் .....

ஏன் ... ??????

சந்தையில் ஒரு காலத்தில் "1000" க்கு மேல் வணிகம்ஆனபங்குகள் இன்று "100 " க்கு கீழ் வணிகம் நடந்துகொண்டுள்ளது . இது இத்துடன் நின்று மேலே வருமா ( அ)இன்னும் கீழே போகுமா என்ற அச்சம் பெரும்பாலானமுதலீட்டாளர்களிடம் தற்சமயம் எழும் பெரிய கேள்வியாகஉள்ளது ..

இந்த நிலை ஏன் ... ??

அந்நிய முதலீட்டாளர்கள் பலர் நமது நாட்டில் 2003 ஆம்வருடத்தில் இருந்து தான் அதிகப்படியாக வந்தனர் . நமதுநாட்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர் கால வளர்ச்சி,சிறப்பான அரசியல் சூழ்நிலைகள் , மற்றும் நடவடிக்கைகள்ஆகியவற்றை கருத்தில் கொண்டு நமதுசந்தைகளில்வர்த்தகத்தை துவங்கினார்கள் ...

அவர்கள் வந்து வர்த்தகம் தொடங்கியதும் ( இயல்பாகவேவாங்கும் சக்தி அவர்களிடம் அதிகம் ) சாதாரண பங்குகள்விலையை ( இப்பொழுது தான் புரிகிறது ; உதா - HDILபங்கின் அதிக பட்ச விலை 1431 குறைந்த பட்ச விலை 62.50மட்டுமே ) ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு விலையைஉயர்த்தி அது சம்பதமான செய்திகளை மிகை படுத்திபங்குகளின் விலையை பல மடங்கு உயர்த்தப்பட்டது .

மக்களும் வாங்கினார்கள் .??

அந்தநிலையில் வந்த செய்திகள்அப்படி .. நமது மக்களும் விற்று லாபத்தினை உறுதி செய்யவில்லை . இது எப்படி சாத்தியம் என்றால் நமது அரசாங்கம்பங்கு சந்தைகளின் எதிர் கால வளர்ச்சியை கருத்தில்வைத்தும் , ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியையும்கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி சிலஅந்நிய முதலீட்டாளர்களை சந்தைக்குள் அனுமதித்தது ..அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில சலுகைகளும்வழங்கப்பட்டன .. ஆனால்தற்போதைய சூழலில் பங்குசந்தை அவர்களது கைப்பாவை ஆகி விட்டது ..

அவர்கள்அதிக அளவில் லாபம் கருதி விற்பனை என்ற பெயரில்சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்களை உருவாக்குகின்றனர்.சந்தை அதை தங்க முடியாமல் சிறிது எழுவதும் அதிகம்வீழ்வதும் என உள்ளது .

மேலும் அதிக பொருளாதாரம்உள்ள தனி நபர் (HNI )மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள்நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆகியவர்கள் இருந்துசந்தையின் சரிவின் வேகத்தை குறைக்க்க முடிந்ததே தவிரநிறுத்த முடியவில்லை ..அந்த அளவிற்கு அந்நியமுதலீட்டாளர்களின் கையில் சந்தை உள்ளது .......

@@ இடுகை ஒன்று முடிந்தது ... இடுகை இரண்டைபார்க்கவும் @@

அடமான பங்குகள்

அடமான பங்குகள் !!!

இப்போது சந்தையிலும் மற்ற இடங்களிலும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இது தான் பங்குகள் அடமானம் ..

பங்குகள் அடமானம் என்றால் என்ன ?

சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை நடத்த முடியாமல் (அ) செலவுகளை சமாளிக்க முடியாமல் போகும் சமயத்தில் சில மெர்சன்ட் வங்கிகளிடம் ( மெர்சன்ட் வங்கிகள் என்பது பங்குகளில் முதலீடு மற்றும் வணிகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் . இது அந்தந்த வங்கிகளின் சம்பந்தமான தனி பிரிவு . உதா ; இந்தியன் வங்கி , ஐ சி ஐ சி ஐ வங்கி , பஞ்சாப் நேசனல் வங்கி , பேங்க் ஆப்இந்தியா , மற்றும் பல வங்கிகள் உள்ளன .) சில நிறுவனங்கள் பண தேவைக்காக தங்களிடம் உள்ள பிரமோட்டார் பங்குகளில் குறிப்பிட்ட அளவு (அ ) தேவைக்கு ஏற்ப பங்குகளை அடமானம் வைத்து பணம் வாங்கி செலவு செய்து பிரச்சனைகளை சரி செய்யும் . இதுவே பங்குகள் அடமானம் எனப்படுவது .

நிறுவனம் சரிவர பிரச்சனைகளை முடித்து சரி செய்து லாபம் வந்ததும் பங்குகளை திருப்பி கொள்ளும் ..ஆனால் நிலைகளை சமாளிக்க முடியாமலும் (அ ) சந்தையில் அந்த பங்குகளின் விலை திடீரென சரிந்தாலோ சம்பந்தப்பட்ட வங்கி நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை லாப நோக்கு அல்லாமல் சந்தை விலையில் விற்று விடும் சந்தை சரிவில் இருந்தாலும் கூட

தற்சமயம் செபிஅறிவிப்பில் இது போல அடமானம் வைக்கும் நிறுவனங்கள் எவ்வளவு பங்குகள் என்ற விவரங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .அந்த உத்தரவு மெர்சன்ட் வங்கி நிறுவனங்களுக்கும் பொருந்தும் .

செபி ஏன் இப்பொழுது இதை செயல்படுத்துகிறது என்றால் சத்யம் நிறுவன பங்குகள் இது போல தான் ( அடமான பங்குகளை) மெர்சன்ட் வங்கி நிறுவனங்கள்சரிவில் அந்த நிறுவன பங்குகளை விற்று விட்டது என்று செய்தி உள்ளது .

சமீபமாக அடமானம் வைக்கப்பட்ட பங்குகள் சில ...ஆனால் எண்ணிக்கை இல்லை ..TATA POWER , JSW STEEL , DR REDDY'S LAB ,NET WORK 18 ,UTV SOFTWARE , ABAN OFF SHORE ,ASIAN PAINT , MIND TREE. மற்றும் பலஇது தங்களின் தகவலுக்காக மட்டுமே .

 இதை வைத்து இந்த பங்குகள் சரியில்லை என எந்த முடிவும் எடுக்க வேண்டாம் ..

நன்றி !!!